பத்த வச்சுட்டியே பரட்டை.

Tuesday, September 28, 2004

சிங்கப்பூரில் கமல் - கன்டனம்

இப்பொதெல்லாம் தரமான தமிழ்ப் படங்கள் குறைந்து விட்டன. நல்ல படம் வரும்வரை படமே பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்ததால் தான் வழிபிறக்கும்.

தமிழை சாகடித்து ஆங்கில மோகத்தை வளர்ப்பது கொடுரம். தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் தமிழை குதறுகிறார்கள்.
என் படங்களுக்கு நான் ஆங்கில தலைப்புகள் வைப்பதில்லை. தமிழ் திரைப்படம் என்னை ஏன் பின்பற்ற வில்லை.

இன்னும் பலவாறுதமிழ் நாட்டையும்,தமிழர்களையும் விமர்சித்தது தமிழ்நாட்டில் அல்ல சிங்கப்பூரில் என்பதுதான் வேதனையான் விசயம்.

இதை பொறுக்காமல் ஒரு தமிழர் உஙகளை பற்றி பெருமையாக நினைத்தேன் ஏன் சார் நமது தமிழ் நாட்டையும், நமது தமிழர்களையும் இங்கு வந்து கேவலமாக பேசுகிறிர்கள் என கேள்வி கேட்டு விட்டு அரங்கத்தை விட்டு சில தமிழர்க்ளோடு வெளியேறினார்.

கமல் சார் அவர்களே சிஙகப்பூரில் தமிழர்களை பற்றி பெருமையாக பேச எந்த விசயமும் இல்லையா ? இல்லை சாதனை(?) தமிழன் தாங்கள் தான் என்ற மமதையா.

உங்கள் படத்தை யாரும் பின்பற்ற வில்லை என கூறுகிறீர்களே உங்கள் படத்தில் அனைவரும் பின்பற்ற என்ன தகுதிகள் உள்ளன. உங்கள் படத்தில் வரும் அபாசத்தை தவிர நீங்கள் சென்னை தமிழ் என்று கூறி தமிழை சாகடித்த படங்கள் எத்தனையோ.

உங்கள் படம் என்றவுடன் முத்த காட்சிகள் தான் நினைவு வருகிறது. உஙகள் பட நாயகிகள் எல்லாம் ஒப்பந்தம் செய்யப் பட்டதும் முதலில் பேட்டி கொடுப்பது முத்த காட்சியை பற்றித்தான். நடிகைகளுக்கு முத்தம் கொடுக்க அலையும் தாங்கள் அதைபற்றி என்றாவது நினைத்துப்பார்பது உண்டா?

நல்ல படம் வரும்வரை படமே பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்ததால் தான் வழிபிறக்கும் என்ற உங்கள் சொல்லின் படிதான் நாங்கள் உங்கள் படத்தை பார்ப்பது இல்லை ஆனாலும் நீங்கள் அதை பற்றி கவலை படாதபோது நாங்கள் என்ன செய்ய முடியும்.

தமிழனின் உடை வேட்டிதானே அதை படத்தில் பயன்படுத்தவிட்டாலும் பரவயில்லை விழாவுக்கு வரும்போதாவது பயன்படுத்தலாமே. ஆங்கில உடை அனியும் தாங்கள் எப்படி ஆங்கிலம் பேசுவதை விமர்சிக்கிறிர்கள். உஙகள் படத்தை சர்வதேச தரத்துக்கு (முத்த காட்சியை தவிர சர்வதேச தரம் உஙகள் படத்தில் வேறு இல்லை என்பது யாரும் அறிந்ததே)கொண்டு செல்லும் தாங்கள் அதை பார்க்கும் தமிழன் மட்டும் முன்னேறாமல் அப்படியே இருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்.

தங்களோடு வளர்ந்த ரஜினி கொன்டையில் தாழம்பூ,கூடையில் குஷ்பு என்று பாடிய படத்தை கூட எளிதாக வெள்ளிவிழா படாமாக இந்த தமிழர்கள் வெற்றிபெற வைத்து விடுகிறார்களே என்ற அதங்கமா?

தங்களுடைய வசூல்ராஜா என்ற படத்தில் தமிழ் வார்த்தை கிடைக்க வில்லை என்று கூறி FEELINGS என்ற வார்த்தையை கூறுகிறிர்கள் அதற்கு இனையான தமிழ் வார்த்தை இல்லையா.

ஒரு விழாவில் உங்களது மகள் ஆங்கிலத்தில் பேச உங்களது ரசிகர்கள் "பீட்டரை குறைக்க சொல் தலைவா" என கூறியும் ஆங்கிலத்தில் தொடர்ந்து பேசிய மகளுக்கு தமிழில் தான் பேச வேண்டும் என்று வற்புறுத்தவில்லையா. அல்லது உங்கள் மகளுக்கு தமிழே தெரியாதா.

தமிழர்களை சிங்கப்பூருக்கு சென்று விமர்சித்ததால் அங்குள்ளவர்கள் இனிமேல் நம் தமிழர்களை எப்படி மதிப்பார்கள். இப்படி உங்களை விமர்சித்தது உங்களை இழிவு படுத்த அல்ல இனிமேலும் வெளியிடங்களில் தமிழர்களை இழிவு படுத்தாதிர்கள் என்பதற்கு தான்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, September 25, 2004

சேது சமுத்திர திட்டம்

தமிழகத்திற்கு சேது சமுத்திர திட்டம் கிடைத்து விட்டது. மகிழ்ச்சியான அறிவிப்பு.
ஓரு மாபெரும் திட்டம் தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறது. இது நேற்று உருவான திட்டம் அல்ல. இது சில தலைமுறைக்கு முன்னால் உருவான திட்டம். அதில் அனைத்து அரசியல்கட்சிகளின் பங்குகளூம் இருந்திருக்கலாம்.

அனால் எலும்பு துண்டுக்கு அடித்துக் கொள்ளும் ** களைப் போல சேது சமுத்திர திட்டம் கொண்டு வந்தது நாங்கள் தான் என்று அடித்துக் கொள்ளும் அரசியல் வாதிகளை பெற்ற ஒரே மாநிலம் தமிழகமாகத் தான் இருக்கும்.

இப்படி பட்ட திட்டத்தை விரைவாகவும் யாருக்கும் எந்த பாதகமும் வந்து விடமல் எப்படி செயல் படுத்துவது என்று சிந்தித்க்காமல் ஓட்டுக்காக சேது சமுத்திர திட்டம் கொண்டு வந்தது நாங்கள் தான் என்று விளம்பரப் படுத்துவதிலேய குறியாக இருக்கிறிர்கள்.

மற்ற மாநிலங்களில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் மாநில வளர்ச்சிக்காக கைகோர்த்து செயல் படுகின்றனர். அனால் இஙுகு மட்டும் எதிகட்சி அளும்கட்சியை எப்படி கவிழ்ப்பது என்றும் அளும்கட்சி எதிர்கட்சியை எப்படி அடக்குவது என்றும் மட்டுமே செயல் பட்டு வருகின்றனர்.

நதீநீர் இனைப்பால் தமிழகத்திற்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்றும், தமிழகத்தின் வளர்ச்சி பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் கூறுகிறார்கள். இந்த திட்டத்திற்கு மட்டும் தமிழக அரசியல் கட்சிகள் அக்கறை கட்டுவதில்லை. இந்த திட்டம் முடிய 20 ஆணடுகள் அகும் அதனால் இந்த தேர்தலுக்கு இந்த திட்டத்தை சொல்லி ஓட்டு வாங்க முடியாது என்ற காரணத்தாலா அல்லது ரஜினிகாந்த் அவர்கள் இந்த திட்டத்தை பிரபல படுத்தியதால் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வந்தால் இந்த பெருமை எல்லாம் அவர்க்கு சென்று விடும் என்ற காரணத்தாலா.

இனிமேலும் ஓட்டுக்காக அரசியல் பண்ணாமல் மக்களுக்கு பயண்படும் திட்டத்திற்கு ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் இனைந்து வளமான வறுமை இல்லா தமிழகத்தை உருவாக்க பாடுபடுங்கள் என்றும் அதற்கு தமிழக மக்கள் உறுதுனையாக இருப்பர்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

R.Raja
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, September 23, 2004

நடிகர்களும் ரசிகர்களும்

தினசரிகளில் தார் பூசினார்கள் என்று செய்தி வந்ததும் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டமோ என்று பார்த்தேன். ஆனால் பிறகு தான் தெரிந்தது கஜேந்திரா பட விளம்பரத்தில் கஜேந்திரா பட தயாரிப்பாளர் துரை போட்டோ மீது தான் தார் பூசியிருக்கிறார்கள். விஜயகாந்த் ரசிகர்களே விளம்பர போஸ்டர் ஒட்டி அவர்களே தார் பூசியது தான் விசித்திரம்.

விஜயகாந்த் எப்போதும் என் ரசிகர்கள் கட்டுக்கோப்பானவர்கள், எப்போதும் என் வார்த்தையை மீறாதவர்கள் என்று கூறிக்கொள்(லு)வார். அப்படியானால் விஜயகாந்த் அவர்கள் தான் தார் பூச கட்டளையிட்டரா? அல்லது அவர் சொல்லுக்கு அவர் ரசிகர்கள் தரும் மரியாதை இதுதானா.

அரசியல் வாதிகளை விமர்சித்த விஜயகாந்த் அவர்களுக்கு அதை எதிர் கொள்ளும் திறமை இருந்திருக்க வேண்டும். துரை பிரச்சனைக்குறிய ஏரியா உரிமைய எடுத்து கொள்ள கூறியும் அதை ஏற்க மறுத்தது விஜயாகாந்த் செய்த தவறு. பாமாகவினர்(வன்முறை மட்டும் தெரிந்தவர்கள்) பிரச்சனை ஏற்படுத்த காரணமாக இருப்பவர் விஜயாகாந்த் அவர்கள் தான். அப்படி இருக்கும் போது அதற்கான தீர்வு எதுவும் தராமல் தன சம்பள பிரச்சனையை மட்டும் கவனித்து கொண்டு நழுவியதால் வந்த பிரச்சனை தான் இது.

இதை பார்க்கும் போது ராமாதாஸிடம் துரை மண்டியிட்டது விஜயகாந்த் தன்னால் முடியாது என கை விட்டாதால் தானே தவிர விஜயகாந்தை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தால் அல்ல என்று தான் தெரிகிறது. படத்தில் மட்டும் எல்லாருக்கும் உதவி செய்யும் விஜயகாந்த் தன்னால் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு தராமல் நஷடத்தை தயாரிப்பாளர் தலையில் கட்டி தன் சுய நலத்தை காண்பித்து விட்டார்.

விஜயாகாந்த் அவர்கள் கஜேந்திரா பட பிரச்சனையில் எடுத்த முடிவை தொடர்ந்து துரை அரசியல்வாதிகள் காலில் விழுந்தது தமிழ் சினிமாவிற்கு ஒரு கரும்புள்ளி. இப்படி தான் செய்த தவறுக்கு அரசியல் வாதிகளை போல் ரசிகர்களை (காசு கொடுத்ததால் அடியாட்கள் என்று கூட சொல்லலாம் ) தார் பூச வைத்து விட்டர்.

இப்படித்தான் பட விளம்பரம் ஒட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனயில் விஜய் ரசிகர்களில் ஒருவர் மற்றொறு ரசிகரால் கொல்லப்பட்டர். சரத்குமார் தன் ரசிகர்களை தொண்டர்களாக மாற்றி விட்டர். விஜய்யும் அஜித்தும் தங்கள் செல்வாக்கை நிருபிக்க பணம் கொடுத்து போஸ்டர் ஓட்டவும், கை தட்டவும் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள் (அப்படியும் படம் பார்க்க ஆள் இல்லை என்பது தனி கதை). இப்படி அரசியல்வாதிகளை போல் நடிகர்களும் ரசிகர்களை தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்த துவங்கி விட்டார்கள்.


ஆனால் இதை எல்லாம் பார்க்கும் போது ரஜினி அவர்கள் பாபா பட பிரச்சனையின் போதும் சரி, வன்முறையாளர்களால் மதுரையில் தன் ரசிகர்கள் தாக்கப்பட்ட போதும் சரி ரஜினிகாந்த் அவர்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கையில் மட்டுமே செயல் பட்ட ரஜினி அவர்கள் எவ்வளவோ மேல். ரஜினி ரசிகர்களும் ஜனநாயக முறைப்படி கருப்பு கொடி ஆர்ப்பாட்டம், வன்முறையாளர்களுக்கு எதிராக ஒட்டுரிமையை மட்டும் ஆயுதமாக பயன்படுத்தினார்கள்.

மக்கள் செல்வாக்கு உள்ள ரஜினி அவர்கள் தன் பிறந்த நாள் அன்று கூட தன் ரசிகர்களை சந்திக்காமல் ஒதுங்கி நற்பணிகளில் மட்டும் ஈடுபட செய்வது நல்ல உதாரணம்.

தன் ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை முதலில் பார்த்துக் கொள்ளவும் என கூறும் ரஜினி அவர்களூம், அவர் வழியில் தங்கள் செல்வாக்கை நிருபிக்க வேண்டும் என்பதற்காக அராஜகத்தில் ஈடுபடாமல் நற்பணிகளில் ஈடுபடும் ரஜினி ரசிகர்களும் மற்றவர்களை விட வித்தியாசமானவர்கள்.

நடிகர்களும், அரசியல்வாதிகளும் தங்கள் தொண்டர்களையும், ரசிகர்களையும் சுயநலத்திற்கு பயன்படுத்தாமல் உங்களையே கடவுளாக நினைக்கும் அவர்களுடைய நலனிலும் அக்கறை செலுத்த ஆரம்பிய்யுஙகள்.


R.ராஜா
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, September 11, 2004

கிருஷ்ன ஜெயந்தி விழாவை விமர்சித்த கருனாநிதி அவர்களே

தி.மு.க. தலைவர் கருனாநிதி அவர்களே நீங்கள் கிருஷ்ன ஜெயந்தி அன்றும் பகவத்கீதையை விமர்சித்து தங்களுடைய இந்து விரோதப் போக்கை தொடர்ந்து உள்ளீர்கள். அதற்கு தாங்கள் சொல்லும் காரணம் தான் அற்பமாக உள்ளது. திராவிட கொள்கையை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா அவர்கள் வாழ்த்து சொன்னதால் ஜெயலலிதாவை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு இந்துக்களின் புனித நூலானா பகவத்கீதைய வசைபாடியிருக்கிறிர்கள்.

அடுத்தவர்கள் மனம் புண்படும்படி பேசக்கூடாது என்ற சிறிய விசயம் கூட தெரியாத தாங்களை எப்படி தமிழின தலைவராக ஏற்றுக் கொள்ள முடியும். மதம் என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம்/நம்பிக்கை. இதில் தலையிட உஙகளுக்கு உரிமையில்லை. திராவிடாக் கொள்கை குர்-ஆனையும், பைபிளையும் ஏற்றுக் கொள்கிறதா?.

இனிமேலும் ஓட்டுக்காக மட்டும் ரமாலான் நோன்புக்கு செல்வதும், கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி சொல்வதும் இல்லாமல் அவர்கள் உணர்வுகளை மதித்து செயல்பட கற்றுக் கொள்ளுங்கள்.

அனைவருக்கும் பொதுவான முதல்வர் பதவியில் இருந்த போது கூட இந்து மத விழாக்களுக்கு மட்டும் வாழ்த்து செய்தி சொல்லும் மரபை கூட கடைபிடித்ததில்லை. இப்படி இந்து மதத்தை மட்டும் தொடர்ந்து விமர்சிக்கும் தாங்களல் எப்படி மதசார்ப்பற்றவன் என்று கூறிக் கொள்ள முடிகிறது.

இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கும் தாங்கள் அத்வானியையும், பா.ஜ.க வையும் இந்துத்வா கட்சி சென்று சொன்னால் மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைத்தால் அது உங்கள் அறியாமையை தான் காட்டுகிறது.

திராவிடக் கொள்கைக்கு ஒவ்வாதது பகவத்கீதை என்பதால் அதை விமர்சிக்கும் உங்களால் திராவிட கொள்கையை ஏற்றுக் கொள்ளாதாவர்களின் ஓட்டுக்களை வேண்டாம் என்று அறிக்கை விட முடியுமா?

அன்னாமலையில் ரஜினி அவர்கள் பேசும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது. பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கும் போது புனிதாமான அரசியலை பயன் படுத்தாதிர்கள். அதுபோல் ஜெயலலிதா அவர்களை விமர்சிக்க ஆயிரம் பிரச்சனைகள் இருக்க புனிதாமான மதத்தை இழிவு படுத்தாதிர்கள்.

இந்தியாவை நேசிக்கும் அனைவரும் இந்தியன் என்ற உணர்வுடன் வாழ விரும்புகிறோம். இப்படி பேசி எங்களின் மத உணர்வுகளை தூண்டாதிர்கள். இதை ஒரு இந்துவாக எழுதாமல் ஒரு இந்தியனாக எழுதுகிறேன்

தனிப்பட்ட காரணங்களுக்காக மதத்தை விமர்சிக்காமல், போலிமதச்சார்பின்மையை விட்டு விட்டு ஆக்கப் பூர்வமான செயல்களில் ஈடுபடுவது தான் தங்களை போன்றவர்களுக்கு பெருமை.
Raja.R
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.