பத்த வச்சுட்டியே பரட்டை.

Friday, October 29, 2004

கிரிக்கெட்டு கிரிக்கெட்டு

நமது தற்போதைய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியிடம் அடிவாங்கிக் கொண்டிருக்கிறது. நமது அணியின் முன்னனி பேட்ஸ்மேன் அனவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கடைசி வீரர்கள் அனைவரும் பேட்ஸ்மேன் போல அழகாக விளையாடுகிறார்கள். ஸ்கோர் போர்ட ரிவர்ஸ் ஆர்டர்ல பார்த்தா தான் கொஞ்சமவது சந்தோசம இருக்கு.

இந்த தொடரில் விளையாடிய சோப்ரா ஒரு டெஸ்ட்டில் கூட சோபிக்க வில்லை. இருந்தாலும் அவருக்கு எந்த அடிப்படையில் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்று தெரியவில்லை. அவருக்கு பதிலாக ரமேஷ், S.S.தாஸ் போன்றவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கியிருக்காலாம். லக்ஷ்மனன் க்கு பதிலாக வேறு ஒருவருக்கு வாய்ப்புகள் வழங்கியிருக்கலாம். பட்டேலை பேட்ஸ்மேனாக வேண்டுமானல் சேர்த்து கொள்ளாலாம். கீப்பருக்கு ஒத்து வராது. தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு வழங்கியிருக்கலாம்.

ஸ்டீவ் வாக் சில மேட்ச்களில் சொதப்பியதற்கே ஓய்வு கொடுத்து விட்டார்கள். ஆனால் இங்கு ஒரு மேட்ச் நன்றாக விளையாடினால் அதை வைத்தே ஒரு வருடம் கிரிக்கெட்டில் குப்பை கொட்டும் அணி இந்திய அணி தான். நமது அணி வீரர்கள் மட்டுமே(விளையாட்டில் மட்டும் அல்ல நிஜத்திலும்) அடிப்பட்டு ஓய்வில் இருக்கும் நாட்கள் அதிகம். மெக்ராத் தன் 100வது கிரிக்கெட் சாதனைக்கு காயம் காரணமாக நான் விளையாடமல் இருந்தது இல்லை என்று கூறியதே நமது அணிக்கு எப்பொழுது புரியுமோ?

என்று விளம்பரத்தில் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார்களோ அன்றே கிரிக்கெட் விளையாடுவது விளம்பரம் அணிந்து வரும் இடமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி சகஜம் தான். ஆனால் போராடி தோல்வி அடைந்திருந்தால் பராவாயில்லை. கடைசி டெஸ்ட்டில் ஜெயித்து(ஜெயிக்காட்டியும் பராவாயில்லை, தோந்துராதிங்கப்பா) 1- 2 என்ற கணக்கிலாவது தோற்க முயற்ச்சிக்கலாம்.ஒருநாள் தொடரையாவது ஜெயிக்கப் பாருங்க.

35 வருட சாதனை போயே போச்சு. புதுசா சாதனை பண்ணாட்டியும் பரவாயில்லை. இருக்குற சாதனையாவது காப்பாத்துங்க ராசா.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home