பத்த வச்சுட்டியே பரட்டை.

Friday, October 22, 2004

டார்ச்சர் கண்ணா டார்ச்சர்

சென்னையில் மட்டுமாவது ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து இலவசமாக புத்தகம் கொடுத்தால் சாதனை ஒரு கோடியை தாண்டும். அதை விட்டு விட்டு இப்ப்டி உங்கள் டீவி என்பதற்காக நிமிடத்திற்கு ஒரு விளம்பரம் கொடுத்து டார்ச்சர் பண்ணாதிர்கள். (அடுத்த இதழ் வீட்டுக்கே வந்தால் நான் பொறுப்பல்ல) நாளை எதாவது முறுக்கு, கடலை மிட்டாய், பாப்கார்ன், தீப்பெட்டி வாங்கினால் குங்கும இலவசம் கண்ணா இலவசம்னு வரலாம். என் நண்பன் பகலில் (ரும்ல டீவி இல்ல-டார்ச்சர் குறைஞ்சது) சூரியன் FM மாத்துனா ரேடியா டர் அகிடும் கண்ணானு மிரட்டுறான்.

குங்குமம் வார இதழுக்கு திடிரென ஏன் இந்த முக்கியத்துவம்? காரணம் அடுத்தாவது ஆட்சியை பிடிக்க வேண்டுமே. (தேர்தல் வர இன்னும் ஒரு வருசம் இருக்கு இப்பவே அம்மா அதிரடி அறிவிப்புகள் அள்ளி விடுறாங்களே. தாத்தாவுக்கு பயம் வந்துடுச்சு.) டீவி யில சன் டீவிக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சிட்டாஙக. செய்திதாளில் சில பேர் தினகரன் (நேற்று இதுக்கும் fair & lovely இலவசமா கொடுத்தாங்கலாம்) படிக்கிறாங்க, சில பேருக்கு முரசொலி படிக்க வேண்டிய கட்டாயம்.

இருந்தாலும் குமுதம், விகடன் அப்பப்ப மஞ்ச மாக்கான் அப்படி இப்படினு அவங்க தண்ட வாளத்த எழுதிறாங்க. அவங்க குட்டும் அம்பலமாகிடுது. அதனால முதல்ல பைக் ஓட்டிட்டு போ சொன்னவங்க இப்ப இலவசமா பொருட்களை கொடுத்து மொத்த மீடியாவை தன் கையில் கொண்டு வர முயற்ச்சிக்கிறார்கள். போட்டியா நமது M.G.R. க்கும் அம்மா விளம்பரம் கொடுத்தா தமிழகம் தாங்காது சாமி.

ஆனா இதே நிலமையில் போன சன் டீவி பாக்கவும் இலவசமா எதாவது கொடுக்க வேண்டிய நிலமை வரும். ஆக மொத்தம் எந்த அரசியல் கட்சியும் மக்களுக்கு நல்லது செஞ்சு ஓட்டு வாங்க தயாரில்லை.

ஆக மொத்தம் குங்குமம் இலவசம் கண்ணா இலவசம். மக்களுக்கு டார்ச்சர் கண்ணா டார்ச்சர்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home