பத்த வச்சுட்டியே பரட்டை.

Monday, October 18, 2004

தங்க தாரகை விருது

தமிழக முதல்வர் அவர்களுக்கு தங்க தாரகை விருது வழங்கப்பட்டிருக்கிறது. பாலின பாகுபாட்டை போக்க பல நடவடிக்கைகள் எடுத்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது. ஆனால் இந்த விருதை தன் கட்சி விழாவைப்போல் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். கடற்கரை சாலை முழுவதும் தொண்டர்கள் படை சூழ விருது வாங்க சென்றார். இந்த விருதுக்கு இவ்வளவு அமர்க்களம் ஏன்?

தன் செய்த சில தவறான முடிவுகளால் கடந்த நாடளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். இந்த விருதின் மூலம் தான் எடுத்த முடிவுகள் அனைத்தும் சரியானவையே என மக்களுக்கு நிருபிக்க இந்த விருதை பயன் படுத்தியிருக்கிறார்..

ஐ.நா அங்கிகாரம் பெறாத அமைப்பு என் ஜெயலலிதாவிற்கு தெரிந்து இருந்தும் தன் தவறுகளை மறைக்க முயர்சித்திருக்கிறார். ஜெயலலிதா அட்சி நடத்துவது தமிழக மக்கள் தான்.அவர்களிடம் இருந்து நல்ல முதல்வர் என்ற விருதை பெருவது தான் அவருக்கு பெருமை.

ஆடம்பரத்தால் மக்களை ஏமாற்ற முயற்சிக்காமல் மக்கள் விரும்பும் அட்சியை கொடுக்க முயலுங்கள். ஆடம்பரம் ஜெயலலிதாவின் வழக்கம் என்றால் கலைஞர் விருது வழங்கும் அமைப்பு ஐ.நா அங்கிகாரம் பெற்ற அமைப்பு அல்ல என்று தேடி கண்டுபிடித்துள்ளார். இதை கண்டு பிடிக்க காட்டிய வேகத்தை எல்லா செயல்களிலும் பயன்படுத்தியிருக்கலாம்.

யார், எந்த அமைப்பு விருது வழங்கினாலும் அதை பாராட்ட மனம் இல்லா விட்டலும் விமர்சிக்க கூடாது. பாலின பாகுபாட்டை போக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை அதனால் இந்த விருது ஜெயலலிதாவிற்கு பொருந்தாது என்று சொல்லுங்கள் என்று ஏற்றுக் கொள்கிறோம். அதை விட்டு விட்டு அங்கிகார பெறாத அமைப்பு என்றெல்லம் கூறுவது பொறாமையின் வெளிப்பாடாக தோன்றும்

ஜெயலலிதா விற்கு தங்க தாரகை விருது. கலைஞருக்கு செம்மொழி தந்த வீரர் விருது. தமிழகம் ஒளிரும்!!

மக்களுக்கு ஏமாளி விருது கிடைக்காமல் இருந்தால் சரி.


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

  • At 12:46 AM, Anonymous Anonymous said…

    HI RAJA,
    UR WEBSITE IS REALLY SUPERB.
    I AM FROM CHENNAI BUT MY NATIVE IS TRICHY ONLY.

    REPLY ME.

    K.PRABAKAR

     

Post a Comment

<< Home