கிருஷ்ன ஜெயந்தி விழாவை விமர்சித்த கருனாநிதி அவர்களே
தி.மு.க. தலைவர் கருனாநிதி அவர்களே நீங்கள் கிருஷ்ன ஜெயந்தி அன்றும் பகவத்கீதையை விமர்சித்து தங்களுடைய இந்து விரோதப் போக்கை தொடர்ந்து உள்ளீர்கள். அதற்கு தாங்கள் சொல்லும் காரணம் தான் அற்பமாக உள்ளது. திராவிட கொள்கையை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா அவர்கள் வாழ்த்து சொன்னதால் ஜெயலலிதாவை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு இந்துக்களின் புனித நூலானா பகவத்கீதைய வசைபாடியிருக்கிறிர்கள்.
அடுத்தவர்கள் மனம் புண்படும்படி பேசக்கூடாது என்ற சிறிய விசயம் கூட தெரியாத தாங்களை எப்படி தமிழின தலைவராக ஏற்றுக் கொள்ள முடியும். மதம் என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம்/நம்பிக்கை. இதில் தலையிட உஙகளுக்கு உரிமையில்லை. திராவிடாக் கொள்கை குர்-ஆனையும், பைபிளையும் ஏற்றுக் கொள்கிறதா?.
இனிமேலும் ஓட்டுக்காக மட்டும் ரமாலான் நோன்புக்கு செல்வதும், கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி சொல்வதும் இல்லாமல் அவர்கள் உணர்வுகளை மதித்து செயல்பட கற்றுக் கொள்ளுங்கள்.
அனைவருக்கும் பொதுவான முதல்வர் பதவியில் இருந்த போது கூட இந்து மத விழாக்களுக்கு மட்டும் வாழ்த்து செய்தி சொல்லும் மரபை கூட கடைபிடித்ததில்லை. இப்படி இந்து மதத்தை மட்டும் தொடர்ந்து விமர்சிக்கும் தாங்களல் எப்படி மதசார்ப்பற்றவன் என்று கூறிக் கொள்ள முடிகிறது.
இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கும் தாங்கள் அத்வானியையும், பா.ஜ.க வையும் இந்துத்வா கட்சி சென்று சொன்னால் மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைத்தால் அது உங்கள் அறியாமையை தான் காட்டுகிறது.
திராவிடக் கொள்கைக்கு ஒவ்வாதது பகவத்கீதை என்பதால் அதை விமர்சிக்கும் உங்களால் திராவிட கொள்கையை ஏற்றுக் கொள்ளாதாவர்களின் ஓட்டுக்களை வேண்டாம் என்று அறிக்கை விட முடியுமா?
அன்னாமலையில் ரஜினி அவர்கள் பேசும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது. பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கும் போது புனிதாமான அரசியலை பயன் படுத்தாதிர்கள். அதுபோல் ஜெயலலிதா அவர்களை விமர்சிக்க ஆயிரம் பிரச்சனைகள் இருக்க புனிதாமான மதத்தை இழிவு படுத்தாதிர்கள்.
இந்தியாவை நேசிக்கும் அனைவரும் இந்தியன் என்ற உணர்வுடன் வாழ விரும்புகிறோம். இப்படி பேசி எங்களின் மத உணர்வுகளை தூண்டாதிர்கள். இதை ஒரு இந்துவாக எழுதாமல் ஒரு இந்தியனாக எழுதுகிறேன்
தனிப்பட்ட காரணங்களுக்காக மதத்தை விமர்சிக்காமல், போலிமதச்சார்பின்மையை விட்டு விட்டு ஆக்கப் பூர்வமான செயல்களில் ஈடுபடுவது தான் தங்களை போன்றவர்களுக்கு பெருமை.
Raja.R
8 Comments:
At 12:05 AM, Anonymous said…
This is an excellent article. Karunanidhi should understand the feelings of Hindus. I really appriciate the way this article was written without hurting anyone but making them understand the feelings of Hindus.
by
Venkat
At 10:55 AM, Anonymous said…
கருணாநிதியின் இந்து விரோதப் போக்கு என்பது குறித்து இன்று நிறைய விவாதங்கள் எழுகின்றன. அதைப்பற்றிப் பேசுமுன் உங்கள் குறிப்பில் காணும் தகவல்கள் பற்றி...
//.....திராவிட கொள்கையை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா அவர்கள் வாழ்த்து சொன்னதால் ஜெயலலிதாவை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு இந்துக்களின் புனித நூலானா பகவத்கீதைய வசைபாடியிருக்கிறிர்கள்.....//
கருணாநிதியின் கண்டனம் ஜெயலலிதா வாழ்த்துச் சொன்னதற்காக அல்ல. அவர் உலகப் பொதுமறை என்ற கருத்தைச் சொன்னதற்காக. இது மதம் சார்ந்த பிரச்சினையே அல்ல. மொழி சார்ந்த பிரச்சினை. காரணம் பகவத்கீதை தமிழ்நூல் அல்ல. திருக்குறள் தமிழ் நூல்.
உலகப்பொதுமறையாக தமிழ்நூலுக்கு மாற்றாக இன்னொன்றைச் சொல்பவர் தமிழராக இருக்க முடியுமா?
அதே சமயம் இது ஒரு சம்பிரதாயமான கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துதானே தவிர முதலமைச்சரின் கொள்கை அறிவிப்பல்ல. எனவே கருணாநிதியும் இதைப் பெரிது படுத்தியிருக்கத் தேவையில்லை. ஆனால் தமிழ்ப்பற்றால், திராவிடப்பற்றால் அவரும் உணர்ச்சி வசப்பட்டு விட்டார்.
இனி முக்கியப் பகுதிக்கு வருவோம். கருணாநிதி இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கிறார். மற்றமதங்களை குறைகூறுவதே இல்லை என்பது ராமகோபாலன், எச் ராஜா போன்ற பரிவாரங்களின் முக்கியக் குற்றச் சாட்டு.அதையே தான் நீங்களும் கூறியிருக்கிறீர்கள்.( இதற்குப் பதில் கூறுமுன் ஒரு தகவல். நானொன்றும் கருணாநிதி ஆதரவாளனோ, மதவிரோதியோ அல்ல.)
ஏனென்றால் -
கருணாநிதி பிறப்பால் இந்து. வேறு மதத்துக்கு மாறியவரல்ல. இந்து மதத்தின் சில கொள்கைகள் பிடிக்காததால் விலகி இருப்பவர்.
ஒருவருக்குத் தன் வீட்டைச் சுத்தப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் தான் உரிமையுண்டு. அடுத்தவர் வீட்டை அவர்களின் சம்மதமின்றி ஒழுங்குபடுத்த யாருக்கும் உரிமையில்லை.
தன் வீட்டுச் சாப்பாடு சரியில்லையென்றால் உரிமையோடு கண்டிக்கலாம். அடுத்த வீட்டுச் சமையலைக் குறைகூறமுடியாது.
வீட்டைவிட்டு விலகி இருப்பவர் எப்படி வீட்டை சுத்தப்படுத்த முடியுமென்கிறீர்களா? வீடு அலங்கோலமாக இருப்பதாகத் தானே அவர் வெளியே நிற்கிறார். (அடுத்த வீட்டில் தங்கிவிடவில்லை.) அவ்வப்போது அவர் தான் பிறந்த வீட்டை ஒழுங்கு படுத்த முயற்சிக்கிறார். வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு அது பிடிக்கவில்லை. அடுத்தவீட்டை சுத்தப்படுத்தாமல் ஏன் இந்த வீட்டை சுத்தப் படுத்த நினைக்கிறார் என்று கேட்கிறார்கள். உரிமையுள்ளவர்களைத்தான் கண்டிக்கவும் தண்டிக்கவும் முடியும். அதைத்தான் கருணாநிதி செய்கிறார்.
இந்துத்வாவின் மீதான பிற திராவிடவிமர்சனங்களையும் இநத அடிப்படையில் தான் பார்க்க வேண்டும். ஆனால் ராமகோபாலன் உள்ளிட்டவர்கள் பிற மதங்களை பழிக்கவும் அழிக்கவும் முயன்று செயல்படுகிறவர்கள். வெறுப்புணர்வுகளைப் பரப்புகிறவர்கள்.
ராமகோபாலனை இதில் நான் பேசக் காரணமுண்டு. விநாயக சதுர்த்தி ஊர்வலங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றியும் நீதிமன்றத் தடைகள் குறித்தும் பத்திரிகையாளர்கள் கேட்டபோது திருவள்ளுவருக்கு மட்டும் பிரம்மாண்ட சிலை வைக்கலாமா? விநாயகருக்கு வைத்தால் தடையா? என்று தேவையில்லாமல் திருவள்ளுவரையும் மறைமுகமாக கருணாநிதியையும் வம்புக்கிழுத்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் பிரம்மாண்ட அனுமன் சிலைகள் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. இதில் பிறமதக்காரர்களோ திராவிட இயக்கத்தினரோ வெறுப்போ அசூயையோ அடைந்ததாகத் தகவல் இல்லை. பல ஊர்களில் தெருவுக்குத் தெரு அமைந்திருக்கும் நிரந்தர மரத்தடிப் பிள்ளையார் கோவில்களில் வண்டிகளை நிறுத்தி காணிக்கையிட்டு வணங்கிச் செல்பவர்களில் கணிசமான பிறமதத்தவர்களும் உண்டு. ஆனால் பக்தி நோக்கத்தாலன்றி அரசியல் ஆதாயங்களுக்காக விசர்ஜன ஊர்வலம் என்ற பெயரால் ஆண்டுதோறும் அரங்கேறும் இந்த நாடகத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்தும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் சூழல் ஆர்வலர்களால் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது தான் ராமகோபாலன் இப்படிக்கூறுகிறார்.
அரிசிமாவில் செய்த பிள்ளையாரை நீர்நிலைகளில் கரைப்பதே மரபு. அது மீன்களுக்கு உணவாவதால் பயனுள்ளதும்கூட. அதிகபட்சமாக களிமண்ணில் செய்வது பயனில்லாதபோதும் அதிக தீங்கில்லாதது. இன்றோ இரசாயனப் பொருள்களால் செய்வதால் எதிர்மறையான விளைவுகளைத்தான் தரும். சற்றே சிந்தித்தால் யாருக்கும் இவை புரியும். ஒருநாள் பயன்பாட்டிற்காக பிரம்மாண்டதாகச் செய்வது உலோகப்பொருட்கள் கலப்பது என்பவற்றின் பின்னுள்ள ஆபத்து, வீணடிப்பு குறித்தெல்லாம் கவலைப்படாமல் சிறுபிள்ளைத்தனமாக திருவள்ளுவர் சிலையோடு ஒப்பிடுவது உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா? இவர்களால் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய சமத்துவ, சகோதரத்திற்கு குந்தகம் விளைவதன்றி பயனேதுமில்லை,
சங்கராச்சாரியார் திருக்குறளைப் படிக்காதே என்று சொல்லும் போது மெய்மறந்து கேட்டுக் கொண்டிருக்கும் நாம் கருணாநிதி பகவத்கீதையைப் பற்றிப் பேசும்போது மட்டும் சீறுகிறோம். நாம் தமிழர்கள்தானா?
மீண்டும் ஒருமுறை
"பகவத்கீதை தமிழ்நூல் அல்ல.
திருக்குறள் தமிழ் நூல்."
என்பதை மனதில் கொள்க!
prganesh
At 10:09 PM, Raja said…
உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். நான் இந்துத்வா கொள்கையுடையவன் அல்ல. மதம், சாதி இவைகளை வீட்டோடு விட்டு விட வேண்டும். அது தான சரியான பண்பாடு."ஒருவருக்குத் தன் வீட்டைச் சுத்தப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் தான் உரிமையுண்டு" ஏற்றுக் கொள்கிறேன். தன் வீட்டை சுத்தப்படுத்த தன் வீட்டில் உள்ளவர்களிடம் தான் குற்றத்தை கூற வேண்டும்.அதை விட்டு விட்டு மற்றவர்களிடம் என் வீடு சுத்தமாக இல்லை என் கூற கூடாது.சிறுபான்மை மாநாட்டில் இந்து என்றால் திருடன் என ஏன் கூறினார். இன்று திருக்குறளுக்கு பகவத் கீதையை விமர்சித்தார். அன்று என்ன காரணத்திற்காக திருடன் என்று கூறினார். மதத்தை பற்றி யாரும் பேசாமல் மக்கள் விருப்பத்திற்கு விட்டு விடுவது தான் நல்லது.
At 4:05 AM, Anonymous said…
Re://
வீட்டைவிட்டு விலகி இருப்பவர் எப்படி வீட்டை சுத்தப்படுத்த முடியுமென்கிறீர்களா? வீடு அலங்கோலமாக இருப்பதாகத் தானே அவர் வெளியே நிற்கிறார். (அடுத்த வீட்டில் தங்கிவிடவில்லை.) அவ்வப்போது அவர் தான் பிறந்த வீட்டை ஒழுங்கு படுத்த முயற்சிக்கிறார். வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு அது பிடிக்கவில்லை. அடுத்தவீட்டை சுத்தப்படுத்தாமல் ஏன் இந்த வீட்டை சுத்தப் படுத்த நினைக்கிறார் என்று கேட்கிறார்கள். உரிமையுள்ளவர்களைத்தான் கண்டிக்கவும் தண்டிக்கவும் முடியும். அதைத்தான் கருணாநிதி செய்கிறார்.
//
sutham illadhavanoda vote mattum inikkudha,ellam cheap publicity.Tamil Nattu Arasiyalvadhigal paparil news varanumna asingathai kooda thimbanuga
At 4:06 AM, Anonymous said…
Re://
வீட்டைவிட்டு விலகி இருப்பவர் எப்படி வீட்டை சுத்தப்படுத்த முடியுமென்கிறீர்களா? வீடு அலங்கோலமாக இருப்பதாகத் தானே அவர் வெளியே நிற்கிறார். (அடுத்த வீட்டில் தங்கிவிடவில்லை.) அவ்வப்போது அவர் தான் பிறந்த வீட்டை ஒழுங்கு படுத்த முயற்சிக்கிறார். வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு அது பிடிக்கவில்லை. அடுத்தவீட்டை சுத்தப்படுத்தாமல் ஏன் இந்த வீட்டை சுத்தப் படுத்த நினைக்கிறார் என்று கேட்கிறார்கள். உரிமையுள்ளவர்களைத்தான் கண்டிக்கவும் தண்டிக்கவும் முடியும். அதைத்தான் கருணாநிதி செய்கிறார்.
//
sutham illadhavanoda vote mattum inikkudha,ellam cheap publicity.Tamil Nattu Arasiyalvadhigal paparil news varanumna asingathai kooda thimbanuga
At 12:47 AM, Anonymous said…
Good design!
[url=http://rvwwgmpu.com/xipe/tbvs.html]My homepage[/url] | [url=http://twfyatwf.com/tfgo/unsb.html]Cool site[/url]
At 12:47 AM, Anonymous said…
Well done!
My homepage | Please visit
At 12:47 AM, Anonymous said…
Great work!
http://rvwwgmpu.com/xipe/tbvs.html | http://ymdvdfim.com/mabj/nqnz.html
Post a Comment
<< Home