பத்த வச்சுட்டியே பரட்டை.

Monday, August 11, 2008

ஞாநிக்கு குட்டு மட்டும்

ரஜினியை பார்த்து பரிதாபப்படும் ஞாநி அவர்களுக்கு,

ரஜினி முள்ளும் மலரும் படத்திலே கூட ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு கவலை இல்லை என பாடினர். அது போல பல பழைய படங்களில் அரசியல் வசனம் வரும். அப்போது அது அரசியலாக்க படவில்லை. ஆனால் எப்ப வருவேன் எப்படி வருவேன் என்று கூறியதை அரசியலாக்கி ஆதாயம் தேடியது உங்களை போன்ற மீடியா தான். அந்த வசனம் ஒரு முறை தான் படத்தில் வரும். ஆனால் அதை வைத்து எத்தனை கட்டுரை எழுதி சம்பாதித்திருக்கும் உங்கள் மீடியா.

நான் வந்தா என்ன வராட்டி என்ன? நீங்க உங்க வேலையைப் பாத்துகிட்டுப் போகவேண்டியதுதானே'' என்கிறார் ரஜினி. ரஜினி தெளிவாக பேசுவதில்லை என்று கூறும் உங்களை போன்றவர்கள் ரஜினியின் மீது கவனத்தை திருப்பியது ஏன் என்று தெரியவில்லை. உங்களால் போக முடியாயது ஏன் என்றால் பிழைக்க ரஜினி வேண்டும்.

//உங்கள் பேச்சுக்கு, அப்போது நீங்கள் பேசிய மறுநாளே, கர்நாடகத்திலிருந்து கன்னட வெறிச் சக்திகளிடமிருந்து கண்டனம் வந்துவிட்டது. ஆனால் அப்போது நீங்கள் ஏன் இந்த விளக்கத்தை அளிக்கவில்லை ? இத்தனை மாதம் கழித்து இப்போதுதான் விளக்கமும் வருத்தமும் வருகிறது. ஏன் ?//

ரஜினி இந்த பதிலை அடுத்த நாளே கன்னட தொலைக்காட்சிக்கு தெளிவாக கூறி உள்ளார். உங்களுக்க கன்னடம் புரியவில்லையா/ அல்லது ஆங்கிலம் கூட புரியவில்லையா இல்லை ரஜினியை விமர்சிப்பதற்காக மறைத்து விட்டிர்களா? குமுதம் தவிர வேற ஏதும் படிப்பதில்லையா. குமுதமும் சேர்ந்து மறைத்து விட்டதா

இதற்கு தாங்கள் அடுத்த இதழில் பதில் சொல்ல தயாரா?


ரஜினி இமையமலை செல்ல தேவை இருக்காது என்று சொல்லி உள்ளிர்கள். ரஜினிக்கு தேவை இருக்காது ஆனால் குமுதத்துக்கு பாபா குகை என 10 issue போட்டு காசு பாக்க வேண்டிய கட்டாயம் இருக்குமே.

சூப்பர் ஸ்டார் இமேஜ் ஒகேனக்கல் வெள்ளத்தில் அடித்துப் போய்விட்டதாக சொல்லி உள்ளிர்கள். இதற்கு முன்பே ரஜினி சொன்ன பதிலை ஞாபக
படுத்துகிறேன். பாபா படம் எதிர்பார்த்த வசூல் இல்லாத போது காவி பிரச்சனையில் ரஜினியை தனிமைப் படுத்த உங்களை போன்றவர்கள்
முயற்சித்த போது ரஜினி சொன்ன பதில் "ஒரு படம் சரியாயாக போக
வில்லை என்றால் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து போய் விடுமா அப்படி போய்விடும் என்றால் அந்த பட்டம் எனக்கு தேவை இல்லை என்று கூறினார். ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கொடுத்தது ரசிகர்கள். அதை கொடுக்கவும் எடுக்கவும் ரசிகர்களுக்கு மட்டும் தான் உரிமை உண்டு.

உங்களை போன்றவர்களுக்கு ரஜினியை புரிய வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு தேவை இல்லை. ஏன் என்றால் உங்களை போன்றவர்கள் துங்குவதை போல நடிப்பவர்கள்.

உங்களுக்கு மட்டும் அல்ல மீடியாவுக்கும் ஒரு கேள்வி ரஜினியை வைத்து பிழைக்க மாட்டோம் என தெளிவான் உறுதியான முடிவு எடுக்க தயாரா?ரஜினி படத்தில் சில இடங்ககளில் ஆபாசமான காட்சிகள வருவதாக குறை கூறி உள்ளிர்கள். குமுதத்தில் ஆபாசமான படங்ககள் இருந்தால் ஒ பக்கங்ககள் எழுத மாட்டேன் என விகடனை விட்டு விலகியதை போல குமுதத்தை விட்டு விலகி ஆபாச/சினிமா நடிகை கவர்ச்சி படம் இல்லாத பத்திரிகையில் மட்டும் எழுதுவேன் என உறுதியான முடிவு எடுக்க தயாரா?

ரஜினியின் ஆதரவு யாருக்கு அல்லது அரசியலுக்கு வருவாரா என குமுதம் கட்டுரை எழுதினால் அதை குமுதம் ஒ பக்கத்தில் விமர்சிக்கும் பலம் உங்களுக்கு உள்ளதா.

கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் நான் நேரடியாக பூச்செண்டு கொடுக்கிறேன்


உங்களுக்காக எங்களது ஒரே பதில்
ரஜினியிடம் தோற்ப்பதற்கு உங்களை போல் காத்திருப்பவர் எத்தனை பேரோ?
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, August 10, 2008

விகடனுக்கு சுளீர்

ரஜினி சென்னை போராட்டத்திற்கு பேசிய மறுநாள் கொடுத்த கன்னட தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் 'கன்னட மக்கள் அனைவரையும் உதைக்க வேண்டும் என சொல்ல நான் என்ன முட்டாளா வன்முறையில் ஈடுபடுகிறவர்களை தான் உதைக்க வேண்டும் என்று சொன்னனே" என்று விளக்கமளித்தார்

இப்போதும் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ள பட்டது அதனால் இனிமேல் சரியாக யோசித்து பேசுகிறேன். அதனால் என் படத்தை கர்நாடகாவில் ரிலிஸ் செய்ய அனுமதிக்க வேண்ண்டும் என வேண்டுகோள் கொடுத்தார்.

போராட்ட அடுத்த நாள் கொடுத்த விளக்கத்திற்கும் இப்போது கொடுத்த விளக்கத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் இப்போது குசேலன் படம் வெளியானதால் அதை பிரச்சனையாக்கி ஆதாயம் தேட மோசமாக 'ரஜினிக்கு சுளீர்" என கட்டுரை எழுதி உள்ளிர்கள். எல்லாரும் ரஜினியை திட்டி எழுதுகிறார்கள் அதனால் கூட்டத்தோடு கூட்டமா நீங்களும் கட்டுரை எழுதி உங்கள் தமிழ் பற்றை(?) காட்டி கொண்டிர்கள்.

ஜெயலலிதா காவிரி பிரச்சனைக்காக உன்னாவிரதம் இருந்த பொது மலர்செண்டு கொடுத்ததர்க்காக பாலச்சந்தர் தயாரிப்பில் உருவான அண்ணாமலை படத்தை ரிலிஸ் செய்ய பிரச்சனை பண்ணினார்கள். ரஜினி சுயநலவதியாக இருந்தால் மலர்செண்டு கொடுத்தர்க்கே படம் ரிலிசுக்கு பிரச்சனை பண்ணியவர்கள் உதைப்பேன் என்று சொன்னால பிரச்சனை பண்ணுவார்கள் என்று யோசிக்கமலா பேசியிருப்பார்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமா வந்துவிட்டது என் கருதி சிவாஜி பட ரிலிஸ் பண்ணும் போது பிரச்சனை பண்ணினார்கள். அது ரஜினிக்கு எதிரான பிரச்சனையா இல்லை தமிழ் படத்திக்கு எதிரான பிரச்சனையா? அவர்கள் ரஜினிய தமிழனாக கருதியதால் தான் சிவாஜி படத்திற்கு எதிராக பிரச்சனை பண்ணினார்கள். தமிழ் மீடியா மட்டும் தான் ரஜினி தமிழனா என 30 வருடமாக சோதித்து கொண்டிருக்கிறது.

குசேலன் கர்நாடக ரைட்ஸ் ரஜினிக்கு போகும் அதனால் தான் வருத்தம் தெரிவித்தார் என்றால் ரஜினி ராகவேந்திரா மண்டபம் மற்றும் தமிழக மக்களுக்கு செய்த உதவியை ஒப்பிடும் பொது அந்த பணம் தூசி தான். விகடனை போல வாசகர்களிடம் வசூல் பண்ணி நிதி கொடுப்பதை போல இல்லாமல் ரஜினி தன் சொந்த பணத்தில் நிதி வழங்கியவர். இது கூட தெரியாமல் ரஜினிக்கு சுளீர் கொடுக்கிறாராம் ஒரு ரிப்போர்டர் அதை ஒரு ஆசிரியர் அப்ருவ் பன்னுரரம். கிசு கிசு எழுதுனவர்களிடம் கட்டுரை எழுத சொன்னால் இதை தான் எழுதுவார்கள்

ரஜினிக்கு தமிழ் பற்று இல்லை அதனால் தான் மன்னிப்பு கேட்டு விட்டதாகா நிங்கள் கருதினால் ரஜினியை பத்தி விகடனில் எழுதாமல் இருக்க நீங்ககள் தயாரா? ரஜினி பாபா படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ஆகவில்லை என பணம் திருப்பி கொடுத்தார் அதுபோல் உருப்படியில்லாத உங்கள் இதழை வாங்கிய எங்களுக்கு பணம் திருப்பி கொடுக்க தயாரா?

இதுபோல் கட்டுரை எழுதிய உங்களுக்கு சுளீர் கொடுப்பதை விட விகடனையும் படிக்காமல் விடுவது தான் உத்தமம்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, August 22, 2005

சிங்கம் ஒன்று புறப்பட்டதே

இதோ பல பிரச்சனைகள் இருந்தாலும் மக்கள் கவலைகளை போக்கும் சக்தி சினிமாவுக்கு உண்டு அதுவும் ரஜினி சினிமாவுக்கு அந்த சக்தி அளவுக்கு அதிகமாக உண்டு என்பதை மீன்டும் நிருபித்தது ரஜினியின் புதிய பட அறிவிப்பு.

முதல்வன் படக்கதை ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதை என இயக்குனர் சங்கர் சொன்னதிலிருந்து ரஜினி படத்தை சங்கர் இயக்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்களிடம் இருந்தது.இதோ அந்த எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டது. அதுவும் இந்த படம் ரஜினி பார்முலா படி இருக்கும் என்பது ரஜினி ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோசம்.

1996 தேர்தலில் ரஜினியுடன் சேர்ந்து முத்து படத்தின் ஒருவன் ஒருவன் முதாலளி பாடல் இசை முக்கிய பங்காற்றியது. அதுபோல இந்த படம் 2006 தேர்தல் சமயத்தில் வெளிவரவிருக்கிறது. எனவே இந்த படத்தில் அரசியல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதோ திட்டமிருக்கு என ரசிகர்கள் எதிர்பார்க்கவும், 40 தொகுதிகளையும் வென்று விட்டோம் என் ஆட்டம் போட்ட அரசியல்வாதிகளும் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.

தமிழகத்தில் 234 தொகுதிகளையும் சேர்த்து உலகம் முழுவதும் கலக்க வருகிறார் சிவாஜிராவ்.

பகையே நீ துள்ளாதே
இவர் போகும் வழியில் நில்லாதே
சீறும் சிங்கம் இவரல்லோ!
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, August 16, 2005

ரஜினியை விமர்சிப்பவர்களுக்கு

உப்பிட்ட தமிழ் மன்னை மறக்காததால் தான் இது வரை தமிழன் பிரச்சனைக்கு மட்டும் குரல் கொடுக்கிறார். கலவரநிதி,வெள்ள நிதி என அவர் பணம் வழங்கியது எல்லாம் தமிழ் நாட்டுக்கு மட்டும் தான்.

காவிரி பிரச்சனை வருவதற்கு காரணம் ரஜினி மாதிரி அல்லவா பேசுகிறீர்கள். என்றைக்காவது கர்நாடகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறாரா.ஜாதி,மதம் மட்டும் அல்லாமல் காவிரி,தமிழ் என கிடைத்ததை எல்லாம் வைத்து அரசியல் பண்ணும் அரசியல்வாதிகளை பற்றி கவலைப் பாடாத நீங்கள் ரஜினியை மட்டும் விமர்சிப்பது ஏன்.

எனக்கு MGR பிடித்த காலத்தில் கூட கலைஞர் பேச்சு தான் பிடிக்கும். அதற்காக அவர் கூறும் கருத்துக்கள் எல்லாம் ஏற்றுக் கொள்கிறேன் என்று அர்த்தம் அல்ல. வட்டாள் நாகராஜ் கூட தன் பிள்ளைகளை ஊட்டி கான்வென்டில் தான் படிக்க வைக்கிறார்.இங்குள்ள அரசியல்வாதிகளைப் போல.

கார்கில் நிதிக்கு கூட எல்லாரும் நிகழ்ச்சி நடத்தி வசூலித்த பொது ரஜினி மட்டுமே தன் சொந்த பணம் 5 லட்சம் கொடுத்தார். வருடம் தோறும் தமிழக்த்தில் உள்ள அனாதை குழந்தைகளுக்கு இனிப்பு,பட்டாசு,புத்தாடை வழங்குகிறார்.

ரஜினி பல லட்சம் மதிப்புள்ள மண்டபத்தை வாழவைத்த தமிழக மக்களுக்கு எழுதிக்கொடுத்த போதும் குற்றம் கண்டுபிடித்த நீங்கள் இப்போது அதில் வருமானத்தை வைத்து எவ்வளவு குழந்தைகளை படிக்க வைக்கிறார் என்று தெரியுமா? கொடுத்தாலும் குற்றம் கண்டுபிடிபிடிக்கும் உங்களுக்கு ரஜினியை கர்நாடகக்காரன் என்று விமர்சிப்பதை விட வேறு என்ன தெரியும்.

ரஜினியை பற்றி கூறும் போது எல்லாம் கர்நாடக்காரன் என்று கூறும் உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை ஜாதி,மத சன்டைகளை எப்படி ஒழிக்க முடியும்.

//உண்மையிலேயே மானமிழந்த ஈனப்பிறவிகள் சில இருக்கத்தான் செய்கின்றன//. உங்களை நீங்களே இப்படி கூறிக்கொள்வது வருத்தமாக உள்ளது. ஓட்டு போட்டு மந்திரியாக்கியவர்களிடம் எதும் கேட்க வக்கற்றவர்கள் தன்னால் முடிந்ததை செய்கிற மணிதனிடம் மட்டும் அதை செய், இதை ஏன் செய்ய வில்லை என கேட்பது அசிங்கமாக உள்ளது.

நாம் ஒன்றும் ரஜினிக்கு பணம் சும்மா கொடுக்க வில்லை. படம் பிடித்திருந்தால் போய் படம் பார்க்கிறோம் அவ்வளவு தான். ரஜினி என்ன உண்டியல் வைத்து வசுலித்தா ஏமாற்றி விட்டார். ரஜினியை விமர்சிக்கும் உங்களை எல்லாம் கேட்கிறேன் உங்களுடைய சம்பளத்தில் எவ்வளவு அடுத்தவர்களுக்கு எதிர்பார்ப்பிண்றி செலவு செய்திருப்பீர்கள்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, August 11, 2005

ரஜினி - 31

ஆகஸ்ட் 15 ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படும் நாள். ஆனால் தமிழ் சினிமா ரசிகன் மட்டும் சற்று அதிகமாக சந்தோசப் படும் நாள். ஆம் ஒரு கருப்பு உருவம் (வைரம்) அபூர்வ ராகங்களில் கதவைத் திறந்த நாளும் ஆகஸ்ட் 15 தான்(Aug 15-1975).


அன்று ரஜினி நினைத்திருப்பார் நான் என் வாழக்கைக்கான கதவை திறக்கிறேன் என்று. ஆனால் உன்மையில் அவர் திறந்தது தமிழ் சினிமாவை இந்தியவுக்கு மட்டும் அல்ல உலகம் முழுவதும் அறிமுகப்படுத்த திறந்த கதவு. முதல் காட்சியிலேயே ஒரு அசத்தாலான அறிமுகம் கொடுத்தவர் பாலசந்தர்.

இதோ ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் தமிழ் திரைக்கு தோன்றினாலும் 30 வருடமாக சூப்பர் ஸ்டாராக மின்னிக் கொண்டிருக்கிறார். 6 மாதம் எந்த ஒரு நடிகரும் படம் வெளியிடவில்லை என்றால் அவரை ரசிகர்கள் மறக்கும் காலத்திலும் 3 வருடத்திற்கு ஒரு படம் வெளியிட்டும் எப்போதும் மக்கள் விரும்பும் சூப்பர் ஸ்டாராக இருப்பது ரஜினியால் மட்டுமே முடியும்.


தமிழ் சினிமாவோடு தமிழையும் வளர்க்கும் சக்தி உங்களுக்கு மட்டுமே உண்டு. இதோ ஒசாக(ஜப்பான்) பல்கலைகழகத்தில் தமிழை விருப்ப பாடாமாக் அறிமுகப்படுத்த முயற்சிகள் நடைபெறுகினறன.உங்கள் படங்களுக்கு சங்க இலக்கியத்டை விட அதிகமாக தமிழ் வளர்க்கும் சக்தி உண்டு.

மனிச்ந்திரதாழ்,ஆப்தமித்ரா என்னும் படங்கள் கேரளா,ஆந்திராவில் மட்டும் HIT ஆக சந்திரமுகியோ இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் வெற்றி பெற்றிருப்பதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் மட்டுமே. நீங்கள் படம் நடித்தால் சாதனைகளை நீங்கள் துரத்த தேவையில்லை. சாதனைகள் வந்து குவியும் உங்கள் படத்தை தேடி.

திரையுலகில் 31 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உன்னால் தமிழும் தமிழ் சினிமாவும் மேலும் வளரட்டும் என வாழ்த்துகிறோம்.


உங்களோட ராசி மட்டும் எல்லாருக்கும் சேரும்.

உங்களால மட்டும் எல்லாருக்கும் லாபம்.

JAIHIND.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, June 17, 2005

சந்திரமுகியின் 100

சிலர் சந்திரமுகி படையப்பா மாதிரில் இல்லா பாட்சா மதிரி இல்ல ஓடாது என ஆருடம் சொன்னவர்களுக்கு ஆம் இது படையப்பாவையும் முந்த போகும் படம் என அவர்களுக்கு உனர்த்திய வெற்றி தான் சந்திரமுகியின் வெற்றி.

குதிரை முழுசா எந்திருக்காம, முன்னங்கால்ல மட்டும் தான் எந்திரிச்சது என எகத்தாளம் பண்ணியவர்களை எட்டி உதைத்து தள்ளிய வெற்றி தான் சந்திரமுகியின் வெற்றி.

ரஜினி படம் மாதிரி இல்லை, மனிச்சந்திரதாழ் அளவுக்கு இல்லை என அவுத்துவிட்ட அன்னாச்சிகளுக்கு ஆப்பு வைத்த வெற்றி இந்த வெற்றி.

தான் நம்பர் 1 நான் தான் சூப்பர் ஸ்டார் என ஆட்டம் போட்ட சில சுள்ளான்களை மிரள வைத்த வெற்றி.

சந்திரமுகி படம் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை/பிடிக்காது என தவறாக விமர்சனம் எழுதியவர்களுக்கு முன்னால் ரசிகர்களை காலர் தூக்கி போட வைத்த வெற்றி தான் சந்திரமுகியின் வெற்றி.

தலைவரின் வெற்றி தன் வெற்றி என் உழைத்த ரசிகர்களுக்கும், எப்போதும் ரஜினி படம் தான் வெற்றி படம் என உலகுக்கு உணர்த்திய அனைத்து ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி நன்றி நன்றி

இது சேர்த்த கூட்டம் அல்ல சேர்ந்த கூட்டம்.

வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மழை தூவாது.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

சந்திரமுகி-நூறாவது நாளை நோக்கி

சந்திரமுகி-நூறாவது நாளை நோக்கி

சந்திரமுகியின் சாதனை ரஜினியின் சாதனை மட்டுமல்ல தமிழ் சினிமாவின் சாதனை.

சந்திரமுகி 50 நாட்களில் 376 திரையரங்குகளில் ஓடி சாதனை புரிந்திருக்கிறது. சந்திரமுகி(தமிழ்) 250 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்துள்ளது. சந்திரமுகி(தெலுங்கு)126 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்துள்ளது.

தமிழகத்தில் அதிக பட்ச சாதனையான படையப்பாவின்(50 நாட்கள்- 96 திரையரங்குகள்) சாதனையை முறியடித்து 134 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்துள்ளது.

முதல் முறையாக தமிழகத்திற்கு அப்பால் [சந்திரமுகி(தமிழ்) ] 100 திரையரங்குகளுக்கு மேல் 50 நாட்களை கடந்துள்ளது.

அதிக தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய படம் (படையப்பா- 86 திரையரங்குகள்) என்ற சாதனையை 5 வருடம் அவகாசம் கொடுத்தும் யாராலும் முறியடிக்க முடியாதாதால், முறியடிக்க துள்ளலுடன் வருகிறது இந்த சந்திரமுகி.


வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

உழைக்காம எதுவும் கிடைக்காது.
உழைக்காம கிடைச்ச எதுவும் நிலைக்காது.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, May 11, 2005

சந்திரமுகி தரிசனம் - 25 நாட்கள்

சந்திரமுகி அரங்கு நிறைந்த காட்சிகளாக 25 நாட்களை(April-14 to May 8) கடந்து உள்ளது. முதல் முறையாக சில திரையரங்குகளில் முன்பதிவு செய்து மட்டுமே 25 நாட்களுக்கும் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. சில பத்திரிகைகளும்,தொ(ல்)லைக்காட்சிகளும் சந்திரமுகிக்கு முதலிடம் தர மறுத்தாலும் மக்கள் முதலிடம் தந்துவிட்டார்கள்.

நமது இனையதளத்திலும் சில நண்பர்கள் விமர்சனம் என்ற பெயரில் படத்தையும், சூப்பர் ஸ்டாரையும் தவறாக விமர்சித்தார்கள். அப்படி விமர்சித்த நம்ம மாப்புகளுக்கெல்லாம் ஆப்பு வைக்கும் விதமாக 25 நாட்களிலேய சாதனையை துவங்கி விட்டார் சூப்பர் ஸ்டார்.

2 லட்சம்,3 லட்சம் ஆடியோ கேசட்டுகள் விற்கப்பட்டன் என சூப்பர் ஸ்டார்க்கு போட்டியாக பொய்யாக அறிவிப்பு செய்வதால் நாமும் குதிரையாகிவிடலாம் என தப்புக்கணக்கு போட்ட கழுதைகள் எல்லாம் சந்திரமுகியுடன் போட்டி போட முடியாமல் இன்னிங்சை விட்டு விலகி விட்டன்.

பெளலிங் கிரவுண்டில் பேட்டிங்கில் வெளுத்து கட்டுவது போல பிற மாநிலங்களிலும் சாதனை புரிகிறார் நம்து சூப்பர் ஸ்டார். 5 வருடங்களாக படையப்பாவின் சாதனயை முறியடிக்க அவகாசம் கொடுத்தும் எந்த நடிகரும் முறியடிக்க முடியாததால் தானே தனது பழைய சாதனையை முறியடிக்க தொடங்கி விட்டார் சொல்லி ஜெயிக்கும் சூப்பர் ஸ்டார்.

நூலோடு போட்ட இந்த மாஞ்சா
யாரோடும் டீலு போடுமே
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.