பத்த வச்சுட்டியே பரட்டை.

Sunday, October 31, 2004

சந்திரமுகிக்காக சமாதான படலம்-விகடன்

எந்த செய்தியையும் எப்படியும் மற்றி எழுத முடியும் என எங்களால் மட்டுமே(விகடன்) முடியும் என நிருபிக்க சந்திரமுகிக்காக சமாதான படலம் தயாரித்துள்ளீர்கள். ரஜினி எதை செய்தாலும் குற்றம் காண முயற்ச்சித்து தோற்கிறீர்கள். ரஜினியின் ஆண்மீக ஈடுபாடு அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்க அதையும் அரசியல் ஆக்கப் பார்க்கிறீர்கள்.

ரஜினி எதிர்க்கும் போது கூட சமமான பலம் உள்ள எதிரியை தான் எதிர்த்து பழக்கம். 1996 ஆம் ஆண்டு ஜெயலலிதாவை எதிர்க்கும் போது ஜெயலலிதா அவர்கள் தமிழக முதல்வர். ஒரு முதல்வரையே எதிர்த்த துணிச்சல் உள்ளவர் ஒரு ஜாதிக்கட்சி தலைவருக்கு பயப்படுவாரா. அப்படி பயந்திருந்தால் ரஜினி இந்த தேர்தல் சமயத்தில் ராமதாஸ் அவர்களை வன்முறையின் ராஜா என் கூறியிருப்பாரா.

தேர்தல் சமயத்தில் ராமதாஸ் மகன் அன்புமணி ரஜினியின் மக்கள் செல்வாக்கை கண்டு பயந்து ரஜினியுடன் பேசியாச்சு சுபம் என்று கூறியதை மறந்து விட்டீர்களா? ரஜினிக்கு எதிரியிடம் எதிர்த்து நின்று ஜெயித்து தான் பழக்கம் .இப்படி அரசியல்வாதிகளை போல் காலில் விழும் பழக்கம் இல்லை. ரஜினி எதிர்க்கும் அளவுக்கும் இன்னும் ராமாதாஸ் வளரவில்லை.

ரஜினி பணத்திற்க்காக படம் எடுப்பவர் அல்ல. கோடிக்கணக்கான ரசிகர்களின் வேண்டுகோளுக்காக எடுக்கப்பட்ட படம். அதை பிரச்சனை வந்தால் காப்பாற்றும் சக்தி ரஜினிக்கும், அவரது ரசிகர்களுக்கும் உண்டு. ரஜினி படத்திற்கு பிரச்சனை வரலாம் என்று தெரிந்து தான் வினியோகஸ்தர்கள் சிவாஜி புரடக்சனில் காத்து கிடக்கிறார்கள். காரணம் மற்ற நடிகர்களைபோல் பிரச்சனை வந்தால் ஓடி ஒழிவதை போல் இல்லாமல் பிரச்சனைகளை வெற்றி கொள்ளும் சக்தி ரஜினிக்கு உண்டு என்று அறிந்ததால்.

ரஜினி படத்தை ஒரு ஏரியாவிற்கு 2 நிமிடம் என்ற கணக்கில் 20 நிமிடத்தில் விற்று விடுமளவுக்கு வினியோகஸ்தர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று ராம்குமார் அவர்கள் பேட்டி கொடுத்ததை படிக்க மறந்து விட்டீர்களா.

பங்காரு அடிகளார் பஞ்சாயத்து பண்ணும் சாமியார் என்ற அர்த்தத்தில் இதை எழுதினீர்களா அல்லது எதை எழுதினாலும் ரஜினி பதில் அறிக்கை கொடுத்து நம் பத்திரிக்கையை பரபரபாக்க மாட்டேன்கிறார் என்ற ஆதங்கத்தில் எழுதினீர்களா என்று தெரியவில்லை. எந்த அர்த்ததில் எழுதினாலும் தனி நபர் பற்றி பொய் விமர்சனம் செய்வது தரமான விகடனுக்கு கரும்புள்ளி தான்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home