பத்த வச்சுட்டியே பரட்டை.

Thursday, September 23, 2004

நடிகர்களும் ரசிகர்களும்

தினசரிகளில் தார் பூசினார்கள் என்று செய்தி வந்ததும் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டமோ என்று பார்த்தேன். ஆனால் பிறகு தான் தெரிந்தது கஜேந்திரா பட விளம்பரத்தில் கஜேந்திரா பட தயாரிப்பாளர் துரை போட்டோ மீது தான் தார் பூசியிருக்கிறார்கள். விஜயகாந்த் ரசிகர்களே விளம்பர போஸ்டர் ஒட்டி அவர்களே தார் பூசியது தான் விசித்திரம்.

விஜயகாந்த் எப்போதும் என் ரசிகர்கள் கட்டுக்கோப்பானவர்கள், எப்போதும் என் வார்த்தையை மீறாதவர்கள் என்று கூறிக்கொள்(லு)வார். அப்படியானால் விஜயகாந்த் அவர்கள் தான் தார் பூச கட்டளையிட்டரா? அல்லது அவர் சொல்லுக்கு அவர் ரசிகர்கள் தரும் மரியாதை இதுதானா.

அரசியல் வாதிகளை விமர்சித்த விஜயகாந்த் அவர்களுக்கு அதை எதிர் கொள்ளும் திறமை இருந்திருக்க வேண்டும். துரை பிரச்சனைக்குறிய ஏரியா உரிமைய எடுத்து கொள்ள கூறியும் அதை ஏற்க மறுத்தது விஜயாகாந்த் செய்த தவறு. பாமாகவினர்(வன்முறை மட்டும் தெரிந்தவர்கள்) பிரச்சனை ஏற்படுத்த காரணமாக இருப்பவர் விஜயாகாந்த் அவர்கள் தான். அப்படி இருக்கும் போது அதற்கான தீர்வு எதுவும் தராமல் தன சம்பள பிரச்சனையை மட்டும் கவனித்து கொண்டு நழுவியதால் வந்த பிரச்சனை தான் இது.

இதை பார்க்கும் போது ராமாதாஸிடம் துரை மண்டியிட்டது விஜயகாந்த் தன்னால் முடியாது என கை விட்டாதால் தானே தவிர விஜயகாந்தை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தால் அல்ல என்று தான் தெரிகிறது. படத்தில் மட்டும் எல்லாருக்கும் உதவி செய்யும் விஜயகாந்த் தன்னால் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு தராமல் நஷடத்தை தயாரிப்பாளர் தலையில் கட்டி தன் சுய நலத்தை காண்பித்து விட்டார்.

விஜயாகாந்த் அவர்கள் கஜேந்திரா பட பிரச்சனையில் எடுத்த முடிவை தொடர்ந்து துரை அரசியல்வாதிகள் காலில் விழுந்தது தமிழ் சினிமாவிற்கு ஒரு கரும்புள்ளி. இப்படி தான் செய்த தவறுக்கு அரசியல் வாதிகளை போல் ரசிகர்களை (காசு கொடுத்ததால் அடியாட்கள் என்று கூட சொல்லலாம் ) தார் பூச வைத்து விட்டர்.

இப்படித்தான் பட விளம்பரம் ஒட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனயில் விஜய் ரசிகர்களில் ஒருவர் மற்றொறு ரசிகரால் கொல்லப்பட்டர். சரத்குமார் தன் ரசிகர்களை தொண்டர்களாக மாற்றி விட்டர். விஜய்யும் அஜித்தும் தங்கள் செல்வாக்கை நிருபிக்க பணம் கொடுத்து போஸ்டர் ஓட்டவும், கை தட்டவும் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள் (அப்படியும் படம் பார்க்க ஆள் இல்லை என்பது தனி கதை). இப்படி அரசியல்வாதிகளை போல் நடிகர்களும் ரசிகர்களை தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்த துவங்கி விட்டார்கள்.


ஆனால் இதை எல்லாம் பார்க்கும் போது ரஜினி அவர்கள் பாபா பட பிரச்சனையின் போதும் சரி, வன்முறையாளர்களால் மதுரையில் தன் ரசிகர்கள் தாக்கப்பட்ட போதும் சரி ரஜினிகாந்த் அவர்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கையில் மட்டுமே செயல் பட்ட ரஜினி அவர்கள் எவ்வளவோ மேல். ரஜினி ரசிகர்களும் ஜனநாயக முறைப்படி கருப்பு கொடி ஆர்ப்பாட்டம், வன்முறையாளர்களுக்கு எதிராக ஒட்டுரிமையை மட்டும் ஆயுதமாக பயன்படுத்தினார்கள்.

மக்கள் செல்வாக்கு உள்ள ரஜினி அவர்கள் தன் பிறந்த நாள் அன்று கூட தன் ரசிகர்களை சந்திக்காமல் ஒதுங்கி நற்பணிகளில் மட்டும் ஈடுபட செய்வது நல்ல உதாரணம்.

தன் ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை முதலில் பார்த்துக் கொள்ளவும் என கூறும் ரஜினி அவர்களூம், அவர் வழியில் தங்கள் செல்வாக்கை நிருபிக்க வேண்டும் என்பதற்காக அராஜகத்தில் ஈடுபடாமல் நற்பணிகளில் ஈடுபடும் ரஜினி ரசிகர்களும் மற்றவர்களை விட வித்தியாசமானவர்கள்.

நடிகர்களும், அரசியல்வாதிகளும் தங்கள் தொண்டர்களையும், ரசிகர்களையும் சுயநலத்திற்கு பயன்படுத்தாமல் உங்களையே கடவுளாக நினைக்கும் அவர்களுடைய நலனிலும் அக்கறை செலுத்த ஆரம்பிய்யுஙகள்.


R.ராஜா
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

  • At 5:32 AM, Anonymous Anonymous said…

    http://kirukalkal.blogspot.com/2004/09/1.html

     

Post a Comment

<< Home