பத்த வச்சுட்டியே பரட்டை.

Thursday, October 28, 2004

கவர்னரும் அரசியலும்

மாநில பிரச்சனைகளை கவனிக்க வேண்டிய கவர்னருக்கே தமிழகத்தில் பிரச்சனை. மாநில சட்டம், ஒழுங்கு, நடவடிக்கைகள் பற்றிய அறிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பும் ஒரு அரசு அதிகாரி தான் கவர்னர். இந்த கவர்னர் தான் என்னை கண்கானிக்க வேண்டும் என்று (கவர்னர் மாற்றல் உத்தரவு அறிவிப்பதற்கு முன்) உச்ச நீதிமன்றம் வரை ஜெயலலிதா அவர்கள் சென்றிருப்பது தமிழக கவர்னர் ராம்மோகன்ராவ் அவர்கள் தன் வேலையை சரியாக செய்யாமல் ஜெயலலிதா சொல்படி நடப்பவரோ என் வரும் சந்தேகம் நியாயமானதே.

ஜெயலலிதாவும், கவர்னரும் தங்கள் வேலையை சரியாக செய்திருந்தால் இந்த பிரச்சனை அரசியல் ஆகியிருக்காது. மத்திய அரசு தன் கூட்டனி கட்சிகளை திருப்தி படுத்துவதற்காக மட்டும் கவர்னரை மாற்றினால் அரசியலமைப்பு கேலி கூத்தாகிவிடும்.

முன்பு ஒருமுறை கவர்னராக இருந்த சென்னா ரெட்டி அவர்களை வேண்டாம் என்று கூறினார். இப்போது ராம்மோகன்ராவ் அவர்கள் தான் வேண்டும் என்கிறார். கவர்னரை தன் (மந்திரிகளை போல்) விருப்பப்படி ஆட்டுவிக்க நினைப்பது சரியல்ல. கவர்னர் பதவி தேவையில்லை என்று கூறிய கலைஞர் கவர்னரை மாற்ற மறைமுகமாக முயற்ச்சிப்பது ஏன் என்று தெரியவில்லை. ஜெயலலிதா,கலைஞர் சன்டையில் கவர்னர் தப்ப முடியாது. அது மட்டும் நிச்சயம்.

இப்பொது கவர்னர் மட்டும் அல்லாமல் சில அரசு அதிகாரிகளும் வேலைக்காக/பதவிக்காக எந்த கட்சிக்கும் ஜால்ரா அடிக்க தயாரகிவிட்டார்கள் என்பது மட்டும் உன்மை.

கவர்னரை மாற்றினால் தமிழகத்துக்கு எதாவது நல்லது நடக்குமா?
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

3 Comments:

  • At 3:11 AM, Blogger Raja said…

    மூர்த்தி வரவேற்க தக்க ஐடியா.

    Raja

     
  • At 11:29 AM, Anonymous Anonymous said…

    raja gundaa. it jayanthi daaaa

     
  • At 11:30 AM, Anonymous Anonymous said…

    vetti velai parkkiraya? olunga work pannu daaa

     

Post a Comment

<< Home