பத்த வச்சுட்டியே பரட்டை.

Saturday, September 25, 2004

சேது சமுத்திர திட்டம்

தமிழகத்திற்கு சேது சமுத்திர திட்டம் கிடைத்து விட்டது. மகிழ்ச்சியான அறிவிப்பு.
ஓரு மாபெரும் திட்டம் தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறது. இது நேற்று உருவான திட்டம் அல்ல. இது சில தலைமுறைக்கு முன்னால் உருவான திட்டம். அதில் அனைத்து அரசியல்கட்சிகளின் பங்குகளூம் இருந்திருக்கலாம்.

அனால் எலும்பு துண்டுக்கு அடித்துக் கொள்ளும் ** களைப் போல சேது சமுத்திர திட்டம் கொண்டு வந்தது நாங்கள் தான் என்று அடித்துக் கொள்ளும் அரசியல் வாதிகளை பெற்ற ஒரே மாநிலம் தமிழகமாகத் தான் இருக்கும்.

இப்படி பட்ட திட்டத்தை விரைவாகவும் யாருக்கும் எந்த பாதகமும் வந்து விடமல் எப்படி செயல் படுத்துவது என்று சிந்தித்க்காமல் ஓட்டுக்காக சேது சமுத்திர திட்டம் கொண்டு வந்தது நாங்கள் தான் என்று விளம்பரப் படுத்துவதிலேய குறியாக இருக்கிறிர்கள்.

மற்ற மாநிலங்களில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் மாநில வளர்ச்சிக்காக கைகோர்த்து செயல் படுகின்றனர். அனால் இஙுகு மட்டும் எதிகட்சி அளும்கட்சியை எப்படி கவிழ்ப்பது என்றும் அளும்கட்சி எதிர்கட்சியை எப்படி அடக்குவது என்றும் மட்டுமே செயல் பட்டு வருகின்றனர்.

நதீநீர் இனைப்பால் தமிழகத்திற்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்றும், தமிழகத்தின் வளர்ச்சி பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் கூறுகிறார்கள். இந்த திட்டத்திற்கு மட்டும் தமிழக அரசியல் கட்சிகள் அக்கறை கட்டுவதில்லை. இந்த திட்டம் முடிய 20 ஆணடுகள் அகும் அதனால் இந்த தேர்தலுக்கு இந்த திட்டத்தை சொல்லி ஓட்டு வாங்க முடியாது என்ற காரணத்தாலா அல்லது ரஜினிகாந்த் அவர்கள் இந்த திட்டத்தை பிரபல படுத்தியதால் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வந்தால் இந்த பெருமை எல்லாம் அவர்க்கு சென்று விடும் என்ற காரணத்தாலா.

இனிமேலும் ஓட்டுக்காக அரசியல் பண்ணாமல் மக்களுக்கு பயண்படும் திட்டத்திற்கு ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் இனைந்து வளமான வறுமை இல்லா தமிழகத்தை உருவாக்க பாடுபடுங்கள் என்றும் அதற்கு தமிழக மக்கள் உறுதுனையாக இருப்பர்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

R.Raja
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

  • At 3:11 AM, Blogger Unknown said…

    This comment has been removed by a blog administrator.

     
  • At 5:48 AM, Blogger Raja said…

    KVR அவர்களுக்கு நான் எலும்புக்கு அலையும் நாய்கள் போல் பேருக்காக அலையும் அரசியல் வாதிகள் என்ற் தான் சொல்லியுள்ளேன். இதில் அரசியல் வாதிகளை நாய்கள் என்று விமர்சிப்பதாக தாங்கள் நினைத்து விட்டால் சேது சமுத்திரம் திட்டம் எலும்பு துண்டு அகிவிடும். நாய்கள் என்ற வார்த்தை கூட இடம் பெற கூடாது என்பதற்காக தான் ** போட்டென்.

    யாரையும் கீழ்தரமாக விமர்சிக்கு எண்ணம் இல்லை. வைகோ அவர்கள் நதி நீர் இனைப்பை பற்றி பேசி வருகிறார்.பிரதமரை வற்புறுத்துகிறார். மகிழ்ச்சிதான். ஆனல் நதிநீர் இனைப்பை முன்னிலை படுத்திய BJP வுடன் கூட்டனி அமைக்காமல் பொடாவில் அடைத்த ஜெயா வை வீழ்த்தும் சுயநலத்தில் தானே காங்கிரஸ் வுடன் கூட்டனி அமைத்தார்.

    எதற்கெல்லாம் பந்த்,உன்னாவிரதம் நடத்தும் அரசியல் வாதிகள் நதிநிர் இனைபை வலியுறுத்தி எதுவுமே செய்யவில்லை என்ற ஆதங்கம் தான். சேது சமுத்திரம் திட்டம் அறிவித்த பின் அதை பேருக்காக அலைந்ததை தவிர இவர்கள் அதை விரைவாக முடிக்க செய்த செயல்கள் தான் என்ன.

    அரசியல்வாதிகள் எப்படியோ 5 வருடத்துக்குள் திட்டத்தை முடிக்க விட்டாலே நன்றி தான்.

     

Post a Comment

<< Home