பத்த வச்சுட்டியே பரட்டை.

Tuesday, August 16, 2005

ரஜினியை விமர்சிப்பவர்களுக்கு

உப்பிட்ட தமிழ் மன்னை மறக்காததால் தான் இது வரை தமிழன் பிரச்சனைக்கு மட்டும் குரல் கொடுக்கிறார். கலவரநிதி,வெள்ள நிதி என அவர் பணம் வழங்கியது எல்லாம் தமிழ் நாட்டுக்கு மட்டும் தான்.

காவிரி பிரச்சனை வருவதற்கு காரணம் ரஜினி மாதிரி அல்லவா பேசுகிறீர்கள். என்றைக்காவது கர்நாடகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறாரா.ஜாதி,மதம் மட்டும் அல்லாமல் காவிரி,தமிழ் என கிடைத்ததை எல்லாம் வைத்து அரசியல் பண்ணும் அரசியல்வாதிகளை பற்றி கவலைப் பாடாத நீங்கள் ரஜினியை மட்டும் விமர்சிப்பது ஏன்.

எனக்கு MGR பிடித்த காலத்தில் கூட கலைஞர் பேச்சு தான் பிடிக்கும். அதற்காக அவர் கூறும் கருத்துக்கள் எல்லாம் ஏற்றுக் கொள்கிறேன் என்று அர்த்தம் அல்ல. வட்டாள் நாகராஜ் கூட தன் பிள்ளைகளை ஊட்டி கான்வென்டில் தான் படிக்க வைக்கிறார்.இங்குள்ள அரசியல்வாதிகளைப் போல.

கார்கில் நிதிக்கு கூட எல்லாரும் நிகழ்ச்சி நடத்தி வசூலித்த பொது ரஜினி மட்டுமே தன் சொந்த பணம் 5 லட்சம் கொடுத்தார். வருடம் தோறும் தமிழக்த்தில் உள்ள அனாதை குழந்தைகளுக்கு இனிப்பு,பட்டாசு,புத்தாடை வழங்குகிறார்.

ரஜினி பல லட்சம் மதிப்புள்ள மண்டபத்தை வாழவைத்த தமிழக மக்களுக்கு எழுதிக்கொடுத்த போதும் குற்றம் கண்டுபிடித்த நீங்கள் இப்போது அதில் வருமானத்தை வைத்து எவ்வளவு குழந்தைகளை படிக்க வைக்கிறார் என்று தெரியுமா? கொடுத்தாலும் குற்றம் கண்டுபிடிபிடிக்கும் உங்களுக்கு ரஜினியை கர்நாடகக்காரன் என்று விமர்சிப்பதை விட வேறு என்ன தெரியும்.

ரஜினியை பற்றி கூறும் போது எல்லாம் கர்நாடக்காரன் என்று கூறும் உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை ஜாதி,மத சன்டைகளை எப்படி ஒழிக்க முடியும்.

//உண்மையிலேயே மானமிழந்த ஈனப்பிறவிகள் சில இருக்கத்தான் செய்கின்றன//. உங்களை நீங்களே இப்படி கூறிக்கொள்வது வருத்தமாக உள்ளது. ஓட்டு போட்டு மந்திரியாக்கியவர்களிடம் எதும் கேட்க வக்கற்றவர்கள் தன்னால் முடிந்ததை செய்கிற மணிதனிடம் மட்டும் அதை செய், இதை ஏன் செய்ய வில்லை என கேட்பது அசிங்கமாக உள்ளது.

நாம் ஒன்றும் ரஜினிக்கு பணம் சும்மா கொடுக்க வில்லை. படம் பிடித்திருந்தால் போய் படம் பார்க்கிறோம் அவ்வளவு தான். ரஜினி என்ன உண்டியல் வைத்து வசுலித்தா ஏமாற்றி விட்டார். ரஜினியை விமர்சிக்கும் உங்களை எல்லாம் கேட்கிறேன் உங்களுடைய சம்பளத்தில் எவ்வளவு அடுத்தவர்களுக்கு எதிர்பார்ப்பிண்றி செலவு செய்திருப்பீர்கள்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

12 Comments:

 • At 5:34 AM, Blogger அரசு said…

  வடிவேலு ரஜினியிடம்
  அரசியலுக்கு வருவீகளா வரமாட்டிகளா
  கட்சி ஆரம்பிப்பிகளா எதாவது கட்சியில் சேருவீகளா
  எந்த க்ட்சியில் சேருவீக அம்மாகூடவா அய்யாகூடவா
  தேர்தலப்போ இங்க இருப்பிகளா இமயமலைக்கு போய்டுவீகளா
  ரஜினி பதில் : லக்க லக்க லக்க லக்க லக்க லக்க லக்க
  வடிவேலு : வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சுத்த கர்நாடகத்தானா இருப்பாம்போலருக்கு இவன்கிட்டபோய் கேட்டம்பாரு நம்மல செருப்பால அடிக்கனும்.

   
 • At 6:40 AM, Blogger KVR said…

  ரொம்ப டென்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ஷனா இருக்கிங்க போல. ஒரு க்ளாஸ் மோர் குடிச்சிட்டு அடுத்தப் பதிவு போடுங்க :-P

   
 • At 8:06 AM, Blogger வெங்காயம் said…

  ராஜா ராமதாஸ் அவர்களே....

  என் பதில் இங்கே...

  http://thamizhinam.blogspot.com/2005/08/blog-post_112420396361907924.html

   
 • At 11:36 PM, Blogger அரசு said…

  ரஜினி கர்நாடகாவா இருக்கட்டும் அல்லது காட்டுமண்ணர்குடியா இருக்கட்டும் அதப்பத்தி தமிழனுக்கு எந்த வருத்தமுமில்லை ஏன்னா இந்தியா என் தாய்நாடு இந்தியர் அனவரும் எம்மக்கள் என்றம் பரந்த எண்ணமும் தொலை நோக்குபார்வையும் கொண்டவன் தமிழன். கர்நாடக காட்டுமிராண்டிகள்போல் அல்ல அனால் அப்படிப்பட்ட தமிழர்களை முட்டாள்களாக நினைக்கிறாறே உங்க தலீவரு அதுதான் தப்புங்றேன். ரஜினி ரசிகன் என்று சொன்னால் அவன் பைத்தியக்காரன் என்று அவன் பெற்றோர்களே சொல்கிற மாதிரிதானே ரசிகர்கள் இருக்கிறார்கள். தலீவரு படம் 100 நாளை தாண்டி ஓடுதுன்னு எல்லாத்துக்கும் சோறு போட்டியே, தலீவர் இன்னா செஞ்சாரு அடுத்தப்படத்துக்கு ரேட் ஏத்தி இருப்பாறு. சுதந்திரதினம் வத்துச்சே அதுக்கு சோறுபோட்டா பூமி பொலந்துருமா இல்லாங்காட்டி வானம் வுழுந்துருமா. உங்ககிட்ட மனிதாபிமானமுமில்லை தேசபக்தியுமில்லை. ஒரு நடிகனோட அடிமையாக இருக்கீங்க. எலீக்சன்னு ஒன்னு வருமே அப்பால தலீவரு ரொம்ப பிகுபண்ணுவாரு ரொம்ப மவுணமா இருப்பாரு திடீர் திடீரென்று இமய மலைக்கு பரப்பாரு கடைசி அஞ்சி நாளைக்கு முந்தி வந்து சவுண்டு உடுவாரு இன்னான்னு ரோசனை பண்னி பார்த்தா எல்லாப்பத்திரிக்கைலயும் கருத்து கணிப்பு போடுவானுவ அதப்பார்த்து போட்டு எந்த கட்சி ஜெயிக்கும்னு எழுதராகளோ அந்த கட்சிக்கு ஆதரவா கொரல்வுடுவாரு இதப்பர்த்துப்புட்டு சில அடிமைகளும் நம்ம தலீவருக்கு இன்னா செல்வாக்குன்னு பீலாய்வுடுவானுவ இதுதான் வேனாங்ரன். கடந்த பாராளுமன்ற தேர்தல்ல பி.ஜெ.பி ஜெயிக்கும்னு எல்லாபத்திரிக்கை காரனுவளும் கருத்து போட்டானுவ அத நம்பி நாம்ம தலீவரும் பி.ஜெ.பிக்கு ஆதருவுன்னு சவுண்டுவுட்டரு தமிழகத்தில் ஒரு தொகுதியில் பி.ஜெ.பிக்கு டெப்பசிடேபோச்சு அதொட தலீவரு சாயம் வெளுத்துப் போச்சு இப்ப ஒரு படம் வெற்றி கண்டவுடன் பழயபடி அடிமைகள் கணவு கான ஆரம்பிடுச்சி. இப்ப ஜெயலலிதாவும் கர்நாடகம்தான். இருந்தாழும் அவுங்க அம்மாவும் அவுங்களும் தமிழகத்துக்கு ரொம்பசேவை செஞ்சி இருக்காங்க. அவுக இந்த பதவிக்கு வரதுக்கு எத்தனை பேருட்ட குத்து வாங்கி இருப்பாங்க அப்படிகுத்துனவுக லிஸ்டுல நம்ம அப்பாவும் இருப்பாகளோ என்று நெனைச்சிதான் ரொம்ப பேரு அம்மா அம்மான்னு அவுக கால்ல வுழுவுறானுவ. சினிமா நடிகர், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை எவ்வளவு அசிங்கமானது என்று எல்லாருக்கும் தெறியும். அதனால ஏதோ படத்ல நடிச்சோமா நாலு காசு பர்த்தோம போனோமா என்பதி உட்டுப்போட்டு லஞ்சத்தை ஒழிக்கப்போரன் ஊழலை ஒழிக்கப்போரன்னு டயலாக்லாம் உடப்படாது. 50ருபா டிக்கெட்டை 250ருபாய்க்கு விற்பனைசெய்து காசு பாக்குற கூட்டத்தை பக்கத்தில் வச்சிக்கிட்டு ஒரு புண்ணாக்கும் செய்யமுடியது.
  கலைங்கர பேர்ல நாட்டின் பண்பாடு கலாச்சரத்தை சீறலிக்கிர உங்களால என்னத்த கிழிக்கமுடியும். பணம் சம்பாதிக்க எத்தனையோ வழி இருக்க ஏன்யா அரசியலுக்கு வந்து புனிதமான அரசியலை கெடுக்குறிங்க, இதையேத்தான் நாங்களும் திருப்பிகேட்கிறோம் பணம் சம்பாதிக்க எத்தனையோ வழி இருக்க கலைங்கர பேர்ல நாட்டின் பண்பாடு கலாசசாரத்தை ஏன்யா சீறலிக்கறீங்கன்னு.

   
 • At 1:36 AM, Blogger enRenRum-anbudan.BALA said…

  காவிரிப் பிரச்சினையில், பதவியில் இருந்தும் ஒரு புல்லைக் கூட பிடுங்கிப் போட முடியாத அரசியல்வியாதிகளை
  (எல்லோரையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்!) தலை மேல் வைத்து கொண்டாடியபடி, ரஜினி காவிரிப் பிரச்சினைக்கு என்ன செய்தார் என்று கேட்பது அபத்தமாக இருக்கிறது.

  'உருப்படாத' நடிகர்கள் என்று கூக்குரலிடும்போது, அவர்களை விட பல விடயங்களில் மக்களை ஏமாற்றும்/இம்சிக்கும் அரசியல்வாதிகள் தான் மக்கள் நினைவுக்கு வந்து தொலைக்கிறார்கள். என்ன செய்வது? அதனால் தான், மக்களுக்கு
  கொஞ்சமாவது சந்தோஷம் தரும் நடிகர்கள் மேல் வெறுப்பு இல்லை, மாறாக ஆதரவு இருப்பதை நாம் பார்க்கிறோம் இல்லையா ?????

   
 • At 5:27 AM, Blogger ராம்கி said…

  //ரஜினி ரசிகன் என்று சொன்னால் அவன் பைத்தியக்காரன் என்று அவன் பெற்றோர்களே சொல்கிற மாதிரிதானே ரசிகர்கள் இருக்கிறார்கள்.//

  Appadiya ?!

   
 • At 12:08 PM, Anonymous TamilSelvan said…

  Re://ரஜினி ரசிகன் என்று சொன்னால் அவன் பைத்தியக்காரன் என்று அவன் பெற்றோர்களே சொல்கிற மாதிரிதானே ரசிகர்கள் இருக்கிறார்கள்.//

  தமாசு...தமாசு...

  வவுத்த வலீக்குது

   
 • At 12:12 PM, Anonymous TamilSelvan said…

  Thamilan Tamilanu arasiyalvadhinga molgai araithadhu padhadunu ivanunga vera inayathula kelampittanunga,
  Enda sorana ketta nayingala oru karnataka karankitta kaveri thanni kekkirengele adhukku avanoda .....
  kudikkalamula,Engada pochi unga thanmanam,pongada poy velya parunga

   
 • At 8:25 AM, Anonymous Anonymous said…

  ரஜினி ரசிகனின் புலம்பல்:

  சூப்பர் ஸ்டாராய் ஜொலித்தவன் பேப்பர் ஸ்டாரா ஆனானே!
  மாவீரனாய் கர்ச்சித்தவன் மாபேடியாய் ஆனானே!
  முத்துவாய் மின்னியவன் சொத்தையாய் ஆனானே!
  தளபதியாய் நடந்தவன் கிழபதியாய் ஆனானே!
  சந்தனமாய் மனந்தவன் சாக்கடையாய் ஆனானே!
  கோபுரத்தில் இருந்தவன் கூவத்தில் வீழ்ந்தானே!
  காசுக்காக வாழ்தானே காமெடியன் ஆனானே!
  பல்டி அடித்தானே பதராக போனானே!
  மன்னிப்பு கேட்டானே மனம்கெட்டு போனானே!
  போனானே போனானே வீணாய்ப் போனானே!

   
 • At 8:25 AM, Anonymous Anonymous said…

  ரஜினி ரசிகனின் புலம்பல்:

  சூப்பர் ஸ்டாராய் ஜொலித்தவன் பேப்பர் ஸ்டாரா ஆனானே!
  மாவீரனாய் கர்ச்சித்தவன் மாபேடியாய் ஆனானே!
  முத்துவாய் மின்னியவன் சொத்தையாய் ஆனானே!
  தளபதியாய் நடந்தவன் கிழபதியாய் ஆனானே!
  சந்தனமாய் மனந்தவன் சாக்கடையாய் ஆனானே!
  கோபுரத்தில் இருந்தவன் கூவத்தில் வீழ்ந்தானே!
  காசுக்காக வாழ்தானே காமெடியன் ஆனானே!
  பல்டி அடித்தானே பதராக போனானே!
  மன்னிப்பு கேட்டானே மனம்கெட்டு போனானே!
  போனானே போனானே வீணாய்ப் போனானே!

   
 • At 7:14 PM, Anonymous Anonymous said…

  http://gongfu.com.ua - Visit us or die!

   
 • At 4:15 AM, Anonymous Anonymous said…

  oru elavum therilanaalum therinja maari pesuraanunga muttaaa koooooooooo............... muttaigal..

   

Post a Comment

<< Home