பத்த வச்சுட்டியே பரட்டை.

Thursday, August 11, 2005

ரஜினி - 31

ஆகஸ்ட் 15 ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படும் நாள். ஆனால் தமிழ் சினிமா ரசிகன் மட்டும் சற்று அதிகமாக சந்தோசப் படும் நாள். ஆம் ஒரு கருப்பு உருவம் (வைரம்) அபூர்வ ராகங்களில் கதவைத் திறந்த நாளும் ஆகஸ்ட் 15 தான்(Aug 15-1975).


அன்று ரஜினி நினைத்திருப்பார் நான் என் வாழக்கைக்கான கதவை திறக்கிறேன் என்று. ஆனால் உன்மையில் அவர் திறந்தது தமிழ் சினிமாவை இந்தியவுக்கு மட்டும் அல்ல உலகம் முழுவதும் அறிமுகப்படுத்த திறந்த கதவு. முதல் காட்சியிலேயே ஒரு அசத்தாலான அறிமுகம் கொடுத்தவர் பாலசந்தர்.





இதோ ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் தமிழ் திரைக்கு தோன்றினாலும் 30 வருடமாக சூப்பர் ஸ்டாராக மின்னிக் கொண்டிருக்கிறார். 6 மாதம் எந்த ஒரு நடிகரும் படம் வெளியிடவில்லை என்றால் அவரை ரசிகர்கள் மறக்கும் காலத்திலும் 3 வருடத்திற்கு ஒரு படம் வெளியிட்டும் எப்போதும் மக்கள் விரும்பும் சூப்பர் ஸ்டாராக இருப்பது ரஜினியால் மட்டுமே முடியும்.


தமிழ் சினிமாவோடு தமிழையும் வளர்க்கும் சக்தி உங்களுக்கு மட்டுமே உண்டு. இதோ ஒசாக(ஜப்பான்) பல்கலைகழகத்தில் தமிழை விருப்ப பாடாமாக் அறிமுகப்படுத்த முயற்சிகள் நடைபெறுகினறன.உங்கள் படங்களுக்கு சங்க இலக்கியத்டை விட அதிகமாக தமிழ் வளர்க்கும் சக்தி உண்டு.

மனிச்ந்திரதாழ்,ஆப்தமித்ரா என்னும் படங்கள் கேரளா,ஆந்திராவில் மட்டும் HIT ஆக சந்திரமுகியோ இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் வெற்றி பெற்றிருப்பதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் மட்டுமே. நீங்கள் படம் நடித்தால் சாதனைகளை நீங்கள் துரத்த தேவையில்லை. சாதனைகள் வந்து குவியும் உங்கள் படத்தை தேடி.

திரையுலகில் 31 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உன்னால் தமிழும் தமிழ் சினிமாவும் மேலும் வளரட்டும் என வாழ்த்துகிறோம்.


உங்களோட ராசி மட்டும் எல்லாருக்கும் சேரும்.

உங்களால மட்டும் எல்லாருக்கும் லாபம்.

JAIHIND.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

19 Comments:

  • At 10:02 PM, Anonymous Anonymous said…

    What's on tonight: Baseball, tennis, and a West Wing marathon
    Some great episodes on Bravo's regular marathon of The West Wing. It starts at 7pm.
    Hey, you have a great blog here! I'm definitely going to bookmark you!

    I have a royal caribbean alaska cruise site. It pretty much covers royal caribbean alaska cruise related stuff.

    Come and check it out if you get time :)

     
  • At 10:15 PM, Blogger குழலி / Kuzhali said…

    // ஆனால் தமிழ் சினிமா ரசிகன் மட்டும் சற்று அதிகமாக சந்தோசப் படும் நாள். ஆம் //

    அரசியல்வாதிகள் தரும் வைத்தியம் சற்று அதிகமோ என்று கூட நினைத்தேன், அது மிக மிக குறைவு என்பது புரிகின்றது.

     
  • At 11:44 PM, Blogger வெங்காயம் said…

    இது குறித்து நாம் எழுதிய பின்னூட்டம் நீண்டுவிட்டதால் தனிப்பதிவாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    http://thamizhinam.blogspot.com/2005/08/blog-post_16.html

     
  • At 12:43 AM, Blogger Raja said…

    //ரஜினியைப் பார்க்கும் போதெல்லாம் காவிரியும், அதற்காக கர்நாடகாவிலிருந்து அடித்து விரட்டப்பட்ட தமிழனும் நினைவில் வந்து தொலைக்கிறான் //

    காவிரிப் பிரச்சனைக்கும் ரஜினி என்ன பண்ணனும். காவிரி பிரச்சனை வரும் போது எல்லாம் ரஜினி அரசியல் தலைவர்களுடம் பேசி இந்த அரசியல் விளையாட்டில் அப்பாவி தமிழர்களை துன்புறுத்தாதீர்கள் என வேண்டுகோள் விடுக்கிறார். கர்நாடகத் தமிழர்களுக்கு உதவுகிறார்.ரசிகர்களும் பாதுகாப்பு கொடுக்கிறார்கள்.

    இப்போது மட்டும் அல்ல 1992 ஜெ உன்னாவிரதம் இருந்த போது திரையுலகில் இருந்து முதன் முதலில் வாழ்த்து சொன்னவர் ரஜினி மட்டும் தான்.

    குழலி சொன்னது ஒன்னும் புரியலியே

     
  • At 1:08 AM, Anonymous Anonymous said…

    //வெங்காயம் said...
    இது குறித்து நாம் எழுதிய பின்னூட்டம் நீண்டுவிட்டதால் தனிப்பதிவாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    http://thamizhinam.blogspot.com/2005/08/blog-post_16.html //

    muthalla ithukku bathil sollu...

     
  • At 2:05 AM, Blogger Raja said…

    வெங்காயம் மற்றும் Anonymous see the Blog

    http://parattai.blogspot.com/2005/08/blog-post.html

     
  • At 6:53 AM, Blogger முகமூடி said…

    திருச்சியிலதான் ரஜினி ரசிகருங்க, இல்ல இல்ல வெறியருங்க ஜாஸ்தின்னு (அங்கன ஒரு எம்.பி கூட ரசினிக்கு கண்மூடித்தனமான ரசிகராமே) கேள்விப்பட்டிருக்கேன்... அதுக்காக இப்படியா ;-))

     
  • At 5:39 PM, Anonymous Anonymous said…

    Rajni - 31

    Tamil Losers - 31

     
  • At 7:11 PM, Blogger குழலி / Kuzhali said…

    //அங்கன ஒரு எம்.பி கூட ரசினிக்கு கண்மூடித்தனமான ரசிகராமே//
    முகமூடியாரே அது பிசினசு, என்ன இப்படி ஒலகம் தெரியாத மனுசனா இருக்கிங்க, அதெல்லாம் பெப்சி டிஸ்டிரிபியூசன் மேட்டரு தல, நீங்கெல்லாம் என்னத்த கட்சி நடத்துறிங்க, என்ன தலைவரோ.

     
  • At 9:47 PM, Blogger Raja said…

    ஆமாம் ரஜினி ரசிகர்கள் அல்ல. முரட்டு பக்தர்கள் தான் நாங்க.
    இப்ப சந்தோசம் தானெ முகமூடி.

     
  • At 1:22 AM, Blogger enRenRum-anbudan.BALA said…

    //அரசியல்வாதிகள் தரும் வைத்தியம் சற்று அதிகமோ என்று கூட நினைத்தேன், அது மிக மிக குறைவு என்பது புரிகின்றது.
    //
    ஆக, "வன்முறை" வைத்தியம் என்பதை ஒப்புக் கொண்டதற்கு உங்களை பாராட்டத் தான் வேண்டும் !!!!

    காவிரிப் பிரச்சினையில், பதவியில் இருந்தும் ஒரு புல்லைக் கூட பிடுங்கிப் போட முடியாத அரசியல்வாதிகளை (எல்லோரையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்!) தலை மேல் வைத்து கொண்டாடியபடி, ரஜினி காவிரிப் பிரச்சினைக்கு என்ன செய்தார் என்று கேட்பது அபத்தமாக இருக்கிறது.

    'உருப்படாத' நடிகர்கள் என்று கூக்குரலிடும்போது, அவர்களை விட பல விடயங்களில் மக்களை ஏமாற்றும்/இம்சிக்கும் அரசியல்வாதிகள் தான் மக்கள் நினைவுக்கு வந்து தொலைக்கிறார்கள். என்ன செய்வது? அதனால் தான், மக்களுக்கு கொஞ்சமாவது சந்தோஷம் தரும் நடிகர்கள் மேல் வெறுப்பு இல்லை, மாறாக ஆதரவு இருப்பதை நாம் பார்க்கிறோம் இல்லையா ?????

     
  • At 2:01 AM, Blogger குழலி / Kuzhali said…

    //ஆக, "வன்முறை" வைத்தியம் என்பதை ஒப்புக் கொண்டதற்கு உங்களை பாராட்டத் தான் வேண்டும் !!!!//
    அடப்பாவி மக்கா நான் எங்கே வன்முறை என்று சொன்னேன், அய்யா சாமி திரிக்காதிங்கோ, நான் கூறியது இவர்களையெல்லாம் ஒரு ஆளாக கருதி இவர்களை எதிர்த்து அறிக்கையெல்லாம் கொடுக்கின்றனரே என்று தான், ஆனால் செய்தி நடிகர்களுக்கு மட்டும் அல்ல, நடிகர்களை ஆராதிக்கும் தீவிர தமிழ் ரசிகர்களுக்கு என்று நினைக்கின்றேன்.

     
  • At 2:14 AM, Blogger குழலி / Kuzhali said…

    //ரஜினி காவிரிப் பிரச்சினைக்கு என்ன செய்தார் என்று கேட்பது அபத்தமாக இருக்கிறது. //
    மற்ற நடிகர்களை யாரும் கேட்கின்றனரா? இல்லையே பிழைக்க வந்தோமா நடித்தோமா போனோமா என்றிருக்கும் நடிகர்களை யார் கேட்கின்றனர், தேவையின்றி விடும் வாய்ஸ்களும் காமிராவிற்குமுன் மட்டுமின்றி வெளியிலும் நடிப்பதும், துதிபாடிகளின் அளவுக்கதிகமான கூச்சல்களும் தானே விமர்சனம் செய்ய வைக்கின்றது. நேரடியாக கேட்கின்றேன் பணத்தாசை(வருமான வரி கட்டுவதிலிருந்து, டிக்கெட் விலைவரை), தனி மனித ஒழுக்கம், தன்னலமற்றது, உதவி செய்தல், பொது நலம், வன்முறை, சொல் ஒன்று செயல் ஒன்று என தற்போது இருக்கும் பல அரசியல்வாதிகளிலிருந்து எந்த விதத்திலும் வித்தியாசப்படாத ஏன் அவர்களையும் விட ஒரு படி அதிகமாகவே இருக்கும் நடிகர்களுக்கு புனிதர் பட்டம் கட்டுவது தான் இத்தனை விமர்சனங்களுக்கும் காரணம்,

     
  • At 2:44 AM, Blogger Raja said…

    //துதிபாடிகளின் அளவுக்கதிகமான கூச்சல்களும்
    உன்மைய சொன்னா கேட்டுக்கனும்.இல்ல தப்ப கன்டுபிடிக்கணும்.

    ரஜினி அரசியல்வாதியுடம் எல்லா விசயத்திலும் வேறுபடுவதால் தான் மக்கள் ரஜினியை விரும்புகின்றனர். பொத்தம் பொதுவாக சொல்லாமல் சரியா சொல்லுங்க. ரஜினியை எல்லாருக்கும் பிடிக்க காரணம் அவருடைய தனி மணித வாழ்க்கை தான். நீங்க எங்க இருக்கீங்க குழலி. ரஜினி மட்டும் தான் சரியாக வருமான வரி கட்டுகிறார். ரஜினி படத்துல சன்டை போடுறார் என்பதற்காக அவர் வன்முறையாளர் என்கிறீர்களா?

     
  • At 2:57 AM, Blogger குழலி / Kuzhali said…

    //ரஜினியை எல்லாருக்கும் பிடிக்க காரணம் அவருடைய தனி மணித வாழ்க்கை தான்//
    மன்னிக்கவும் ரொம்பத்தான் நீங்க கிச்சு கிச்சு மூட்டுகின்றனர்,
    http://mugakkannadi.blogspot.com

    மேற்கண்ட சுட்டிக்கு சென்று பாருங்கள், முகக்கண்ணாடி என்ன சொல்கின்றாரென்று.

     
  • At 3:18 AM, Blogger ஜோ/Joe said…

    // ரஜினியை எல்லாருக்கும் பிடிக்க காரணம் அவருடைய தனி மணித வாழ்க்கை தான்.//
    மத்தவங்கள விடுவோம் .சினிமாகாரங்களையே எடுத்துக்குவோம் .நம்பியார் , ஜெய்சங்கர் போன்றவர்கள் ரஜினியை விட யோக்கியர்கள் என்று திரையுலகிலரிடையே பெயர் பெற்றவர்கள் . அவர்களை ஏன் அதை விட பிடிக்கவில்லை ..தனிமனித குணத்தை வைத்து ஒரு நடிகனை பிடிக்கிறது என்பதை விட அபத்தம் வேறு எதுவும் இல்லை .அதுவும் அப்படி கொண்டாடும் அளவுக்கு ரஜினி ஒன்றும் யோக்கிய சிகாமணி அல்ல .முன்பு அப்படி இருந்தார் .இப்போ யோக்கியமாக இருக்கிறார் என்று சொல்லுவார்கள் ..இவரை விட ஆரம்பத்திலிருந்தே யோக்கியமாக இருப்பவர்கள் மேல் இல்லையா?

     
  • At 3:28 AM, Anonymous Anonymous said…

    If you want to know what Mr. Rajinikanth did in 1992, you can refer Mr. Ramki book which would bring lot of surprises to you. Thank you. Balaji Manikandan

     
  • At 5:32 AM, Blogger Raja said…

    முன்பு தவறாக நடந்து கொண்டிருக்கலாம். ஆனால் தற்போது தன் தவறை திருத்திக் கொண்டுள்ளார். அதற்காக பழசை அவர் மறைக்க வில்லையே.
    அவர் செய்த தவறால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இருந்ததில்லையே.

     
  • At 6:28 AM, Blogger வெங்காயம் said…

    அய்யய்யோ!! விவாதம் தனிநபர் தாக்குதலாக மாறிவருகிறது. நான் ரஜினியை விமர்சிக்கவில்லை. சராசரி மனிதனைப் போல்தான் அவர் நடந்து கொள்கிறார். அவருடைய ரசிகர்களின் செயல்களையே விமர்சித்தேன்.

     

Post a Comment

<< Home